மால்தீவ்ஸில் காதல் பயணம்... இரவில் மர்ம கொலை… Honeymoon Photographer சீரிஸ் வொர்த்தா? வேஸ்ட்டா?

Honeymoon Photographer: ஹனிமூனுக்கு செல்லும் ஜோடிக்கும் அவர்களுடன் செல்லும் புகைப்படக்காரருக்கும் இடையில் நடக்கும் ஒரு கதை. இந்த வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது என்ற பாசிட்டிவ், மைனஸ் பேசும் தொகுப்புகள்.
திருமணம் முடிந்து ஹனிமூன் செல்லும் ஜோடியை படம் பிடிக்க புகைப்படக்காரரான அம்பிகா அவர்களுடன் பயணிக்கிறார். அட ரொமான்ஸ் சொக்க வைக்க போகுதுனு நினைச்சா அதுதான் தப்பு. முழுக்க முழுக்க திரில்லர் லெவல் வெப்சீரிஸ்.
அந்த அம்பிகாவுக்கும், அதிர் என்னும் அந்த மணமகனுக்கு ஒரு சைட் ரொமான்ஸ் ஓடுகிறது. முதலில் வில்லியாகவே காட்டப்படுகிறார் அந்த மணப்பெண் ஜோயா. அவர்கள் ஹனிமூன் என்சாய் செய்துக்கொண்டு இருக்க அம்பிகா புகைப்படம் எடுக்கிறார்.

அங்கு இவர்களுக்கு சுபின் என்பவர் அறிமுகமாகிறார். சுபின் மற்றும் அம்பிகா நெருக்கமாக இதை பார்க்கும் அதிர் கடுப்பாகிறார். அம்பிகாவுடன் நெருக்கமாக அவர் அதிரை திட்டிவிட்டு சுபினை அழைத்துக்கொண்டு தனியாக செல்ல மயங்கி விடுகிறார்.
காலையில் எந்திரிச்சால் தன்னுடைய பெட்டில் இருக்கிறார். தலையில் அடிப்பட்டு இருக்கிறது. என்ன நடந்தது என தெரியவில்லை. அதிருக்கு 3.30 க்கு மெசேஜ் செய்து இருக்கிறார். ஆனால் அவரோ மர்மமான முறையில் 3.45க்கு இறந்து இருக்கிறார்.
இதில் அம்பிகாவின் பெயர் அடிப்படுகிறது. அவர் தலைமறைவாகி தன் மீது இருக்கும் குற்றத்தை நிரூபிக்க எல்வின் உதவியை நாடுகிறார். இவர்கள் ஜோயாவை சந்திக்க அவரிடம் இருக்கும் ட்விஸ்ட் வேறு ரகம். ஒரு கட்டத்தில் சுபின் தான் இதை செய்தார் என ரசிகர்களும் நினைக்க அங்கு தான் ட்விஸ்ட்டே.
அம்பிகாவின் கேரக்டர் சரியாக மெறுகேற்றி இருக்கின்றனர். ஆனால் கிளைமேக்ஸ் பல மெடிக்கல் மாபியா கதை போல இருந்தாலும் இப்படி ஒரு வெப்சீரிஸுக்கு எதிர்பார்க்க ட்விஸ்ட்டு தான். இந்த கதையில் நடித்த அனைவருமே தங்கள் கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.

ஆஷா நெகி மற்றும் ஜாசன் தாமின் கேரக்டர் தான் வெப்சீரிஸில் அதிக இடம் பிடித்து இருக்கிறது. அலுப்பை தட்டாமல் சுவாரஸ்யமாகவே செல்கிறது. பேரை பார்த்து வேறு ஆசையில் உள்ளே போனால் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இந்த சீரிஸ் தற்போது ஹாட்ஸ்டாரில் இடம் பெற்றுள்ளது.