17 கோடிக்கு இத்தனை கோடியா? மகாராஜா படத்தின் நெட்பிளிக்ஸ் வசூல் சாதனை…
Maharaja: விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸில் மட்டுமே பல கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தாண்டு ஆக்ஷன் திரில்லராக வெளியானது மகாராஜா திரைப்படம். நித்திலன் ஸ்வாமிநாதன் இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார். விஜய் சேதுபதியுடன் அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தலின்படி நித்திலனை விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல அனுப்பி இருக்கின்றனர். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வேறு நிறுவனத்துக்கு மாற்றி கொடுக்கலாம் என நித்திலனிடம் சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் இப்படம் விஜய் சேதுபதிக்கு ரொம்பவே பிடித்து படப்பிடிப்பும் தொடங்கியதாம். இப்படம் தியேட்டரில் ஜூன் 14 இந்தவருடம் திரைக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் படம் உலகமெங்கும் வெளியாகி திரையரங்கில் வரவேற்பை பெற்றது. 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜூலை 12 மகாராஜா படத்தை தமிழ், இந்தி உட்பட சில மொழிகளில் வெளியிட்டது. ஓடிடியிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் மகாராஜா 20 மில்லியன் பார்வைகளை பெற்றது. இந்த படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 17 கோடிக்கு மட்டுமே வாங்கியது.
ஆனால், மகாராஜா படத்திற்கு வருமானம் கிட்டத்தட்ட 150 கோடி வரை கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் அனுராக் கஷ்யப்பால் இப்படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதே அதிகரித்த வருமானத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.