
latest news
OTT: இனிமே இவ்ளோதான் காசு கொடுப்போம்!.. மொத்தமா ஆப்பு வச்ச ஓடிடி நிறுவனங்கள்!..
OTT-யில் புதிய படங்கள்:
OTT: கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த போது அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தது. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் சில தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்தார்கள். நடிகர் சூர்யா கூட தன்னுடைய ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய படங்களை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்தார்..
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் புதிய படங்கள் 3 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியானது. புதிய படங்களை பல கோடி விலை கொடுத்து Amazon Prime, Netflix போன்ற நிறுவனங்கள் வாங்கியது. எனவே சினிமா வியாபாரத்தில் ஓடிடி (டிஜிட்டல்) உரிமை ஒரு முக்கிய பகுதியாக மாறியது. அதுவும் அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களை 100 கோடிக்கு மேல் கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்கியது. எனவே ஓடிடி மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஹீரோவுக்கு சம்பளமே கொடுத்து விடலாம் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளருக்கு ஏற்பட்டது.
ஓடிடி நிறுவனங்கள் சந்தித்த நஷ்டம்:
ஆனால் தர்பார், இந்தியன் 2, தக் லைஃப், கங்குவா, குட் பேட் அக்லி, கூலி உள்ளிட்ட பல படங்களை அதிக விலைக்கு வாங்கி அதில் அதிக நஷ்டம் அடைந்ததால் ஓடிடி நிறுவனங்கள் சுதாரிக்க துவங்கி புதிய படங்களுக்கு கொடுக்கும் விலையை குறைத்தது. ஓடிடி வியாபாரம் முக்கியமானது என்பதால் புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது.
அதாவது ஓடிடி நிறுவனங்கள் சொல்லும் தேதியில்தான் புதிய படங்களை வெளியிடும் நிலைமைக்கு தயாரிப்பாளர்கள் ஆளானார்கள். சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி உரிமை விற்கப்படாததால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

வியாபாரத்தை பொறுத்தே விலை:
இந்நிலையில், Amazon Prime, Netflix ஆகியவை ஒரு படத்தின் வியாபாரத்தை பொறுத்து அந்த படத்திற்கு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்கிற அதிரடி மற்றும் அதிர்ச்சி தரும் முடிவை எடுத்திருக்கின்றன. அதேபோல் ரிலீசுக்கு முன்பே படத்தை வாங்கக்கூடாது, படத்தின் வசூல் என்னவோ அதை பொறுத்தே விலையை நிர்ணயிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார்களாம். அதாவது படத்தின் வசூல் 100 எனில் ஒருவிலை, 50 கோடி வசூல் எனில் ஒரு விலை. 200 கோடி வசூல் செய்தால் இவ்வளவு விலை சாட் போட்டு இருக்கிறார்களாம்.
பொதுவாக ஒரு தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டில் 60 சதவீதம் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமையிலேயே கிடைத்துவிடும். ஆனால் தற்போது ஓடிடி நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவால் அது 30 சதவீதமாக குறைந்து விடும் என்கிறார்கள். அதோடு, சொந்த பணத்தை போட்டு படம் எடுக்காமல் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்களால் இனிமேல் சினிமாவே தயாரிக்க முடியாது எனவும் சொல்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் இதை எப்படி கையாள போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதில் சோகம் என்னவெனில் ஓடிடி நிறுவனங்கள் எடுத்துள்ள அதே முடிவை தொலைக்காட்சி சேனல்களும் பின்பற்றலாமா என யோசித்து வருகிறார்களாம்.