OTT: ஹார்ட்பீட் இரண்டாவது சீசனின் ரிலீஸ் தேதி லீக்… அடடா இன்னும் இத்தனை நாள் இருக்கா?

OTT: தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான வெப்சீரிஸான கடந்தாண்டு ஒளிபரப்பான ஹார்ட் பீட் சீசன் 2 தொடர் குறித்த சுவாரசிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
பொதுவாக ஒரே நேரத்தில் வெளியிடப்படும் வெப் சீரிஸ்கள் தான் இதுவரை ஹிட் ஆக்கிக் கொண்டிருந்தது. ஆனால் சமீபத்திய காலமாக ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட எபிசோடுகளை வெளியிடும் வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்களிடம் ஆதரவு பெரிய வருகிறது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட வெப் சீரிஸுகள் ஒளிபரப்பாகி வந்தாலும் கடந்த ஆண்டு மருத்துவக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பான ஹார்ட் பீட் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
புது முகங்களால் உருவான இந்த வெப் சீரிஸ் ரீனா என்ற கேரக்டரை மையமாக வைத்து பலம் வந்தது. கடந்த சீசன் இறுதியில் ரீனாவின் பிறப்பு குறித்து எல்லோரும் தெரிந்து கொள்வதும் அதனால் அவரை ஊரை விட்டு போக சொல்லும் அவர் தாய் மருத்துவர் ரதி.
இன்னொரு பக்கம் காதலர் அர்ஜுன் மூலம் இந்த விஷயம் உடைய இருதரப்பிலும் இருந்து விலகி நான் இந்த இடத்தை விட்டு போக முடியாது என ரீனா அழுத்தமாக கூறும் விஷயத்துடன் கடந்த முதல் சீசன் முடிந்தது. தற்போது இரண்டாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கான பிரமோஷன் பரபரப்பாக நடந்து வந்தது. ஆனால் இதுவரை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ இந்த தேதியும் வெளியிடப்படவில்லை. ஆனால் பிரமோஷன் படுவேகமாக பரபரப்பாகவும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வெப் சீரிஸ் இன் முக்கிய கேரக்டர்கள் இணைந்து லைவில் பங்கேற்றனர். அப்பொழுது பேசிக் கொண்டிருக்கும்போது பிரபல கேரக்டர் ஆன தேஜு எல்லாரும் ஒரே கேள்வியை கேட்கிறீங்க என ராக்கி சொல்ல
22 மே தானே ரிலீஸ் என உடைத்து விடுகிறார்.
இதன் மூலம் இன்னும் இரண்டு வாரங்களில் ஹார்ட் பிட் சீசன் 2 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.