OTT: சந்தானம் தனியா சிக்கிட்டாரே… இந்த வார ஓடிடி படங்களின் சூப்பர் அப்டேட்!...

by AKHILAN |
OTT: சந்தானம் தனியா சிக்கிட்டாரே… இந்த வார ஓடிடி படங்களின் சூப்பர் அப்டேட்!...
X

OTT: தமிழ் சினிமா படங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் லிஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டின் தொகுப்புகள்.

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் டிடி படத்தின் அடுத்த பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் ஜீ5 தமிழ் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

இன்வெடிகேட்டிவ் ஜானரில் வித்தியாசமான கதையை எடுத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் லெவன். ரிலீஸ் செய்யப்பட்ட போதே லெவன் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த நிலையில் தற்போது இப்படம் டெண்ட் கொட்டா ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் பெரிய அளவில் தமிழ் படங்களுக்கு வாய்ப்பு இல்லை. மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படக்கலம், சுபம் திரைப்படங்கள் ரிலீஸாகி உள்ளது. இதை தொடர்ந்து கேசரி சேப்டர் 2 படமும் வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்தில் ஸ்னோ வொயுட் படமும் ரிலீஸாகி இருக்கிறது. சோனி லைவ்வில் மலையாளத்தில் ஆலப்புழா ஜிம்கானா வெளியாகி இருக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸில் ராணா நாயுடு சீசன் 2 வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் அமெட்சூர், பிளைட் ரிஸ்க், டீப் கவர் படமும் வெளியிடப்படுகிறது.

Next Story