திணறும் கோலிவுட் படங்கள்… ஓவராக ஆட்டம் காட்டும் ஓடிடி தளங்கள்… நல்லா இல்ல…

by Akhilan |   ( Updated:2024-10-04 13:00:45  )
திணறும் கோலிவுட் படங்கள்… ஓவராக ஆட்டம் காட்டும் ஓடிடி தளங்கள்… நல்லா இல்ல…
X

OTT: தற்போது டிஜிட்டல் உலகத்தில் ரசிகர்கள் திரையரங்க ரிலீஸ் படங்களை விட ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்களுக்குதான் அதிகப்படியான் மவுஸ் தொடங்கி இருக்கிறது. இதனால் ஓடிடி தளங்கள் தலைகால் புரியாமல் ஆடுவதாக கூறப்படுகிறது.

சினிமா துறை தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது. கொரானாவிற்கு முன்னர் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே அவர்களுக்கு மிகப்பெரிய வருமானமாக இருந்தது. தற்போது டிஜிட்டல் ரைட்ஸ் என்னும் முறையில் ஓடிடி தளங்களுக்கு படத்தை விற்கும்போது மிகப்பெரிய தொகையை பார்த்து விடுகின்றனர்.

முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் ஓடிடி விற்பனைக்கு விலை நிர்ணயித்து வந்தனர். ஆனால் ஓடிடிகள் ஆதிக்கம் தற்போது அதிகரித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு படங்களுக்கும் விலை நிர்ணயிக்கும் முடிவை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட படங்களை ரிலீஸ் செய்துவிட்டு அது தரும் வரவேற்பை வைத்து விலை கூறுவதாக அதிரவிட்டனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படம் வரவேற்பை பெற்றது. ரிலீஸுக்கு முன்னரே 60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி வாங்கியது.

படம் ரிலீஸ் ஆகி சுமாரான விமர்சனங்களை பெற்ற நிலையில் இவ்வளவு பெரிய தொகைக்கு படத்தை வாங்க முடியாது. விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து நாங்கள் கூறிய நாட்களுக்குள் நீங்கள் படத்தை ஒப்படைக்காததால் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என கூறிவிட்டனர்.

இது தற்போது கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஒரு படத்தின் மோசமான விமர்சனத்தால் ரிலீஸ் ஆகும் முன்னரே குறிப்பிட்ட தொகையை குறைக்க சொல்லும் இதே ஓடிடி நிறுவனங்கள் மகாராஜா போன்ற மிகச் சிறந்த படங்களை 15 கோடி என்னும் சொற்ப தொகைக்கு வாங்கி 150 கோடி வரை வருமானத்தை பார்த்ததையும் பார்க்க முடிகிறது.

இதை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு நல்ல வரவேற்பு உடைய படங்களின் விலையை ரிலீசுக்கு பின்னர் அதிகரித்தால் ஓடிடி நிறுவனங்கள் ஒத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திற்கும் இதே போன்று விலை குறைப்பு சம்பவம் நடநந்தாம். ஆனால் தங்கலான் பட நிறுவனம் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் அதன் ஓடிடி ரிலீஸ் தள்ளி போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story