தியேட்டரே வேணாம்… மாஸ் பண்ணும் ஓடிடி… வெளியாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

by Akhilan |
தியேட்டரே வேணாம்… மாஸ் பண்ணும் ஓடிடி… வெளியாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
X

OTT Release: முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் டிவிகளில் என்ன படம் போட போகிறது என தான் பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் தற்போது இந்த வாரம் ஓடிடியில் தீபாவளிக்கு என்ன படம் வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.

அந்த வகையில் இன்று அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு ஹாட்ஸ்டார் ஓடிடியில் லப்பர் பந்து திரைப்படம் வெளியாக இருக்கிறது. திரைப்படம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் இருவரின் நடிப்பில் வெளியானது. சின்ன பட்ஜெட் திரைப்படம் என்றாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் வெற்றியை பெற்றது.

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் தங்கலான். கேஜிஎஃப் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சியான் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இத்திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது.

விதார்த் மற்றும் வாணி போஜன் இருவரின் நடிப்பில் உருவான திரைப்படம் அஞ்சாமை. குடும்ப சிக்கலை மையமாக வைத்து உருவாகி இருந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்தோலாஜிக்கல் சீரிஸாக வெளியாகி இருக்கும் புத்தம் புது காலை விடியாதா அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. ஐந்து எபிசோடுகளை உள்ளடக்கி இருக்கும் இந்த சீரிஸில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன்தாஸ், கௌரி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீமாகுரோசி நடிப்பில் மித்யா தி டார்கர் சாப்டர் வெப்சீரிஸ் நவம்பர் 1ம் தேதி ஜீ5ல் வெளியாக இருக்கிறது. ஆசிப் அலி, அபர்ணா முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கிஷ்கிந்த காண்டம். குரங்குகள் மற்றும் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம் நவம்பர் 1ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

Next Story