அல்லு அர்ஜூன் முதல் டோவினோ வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ்… எஞ்சாய் மக்களே…

by Akhilan |
OTT
X

OTT Release: தமிழ் ஓடிடி ரிலீஸில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த ஆச்சரிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புஷ்பா2: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா2. இப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிலீஸாக முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தை எகிற செய்தது.

முதல்முறையாக தென்னிந்திய திரைப்படம் 2000 கோடி வசூல் குவிந்தது. இதனால் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா2 ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

ஐடென்டிட்டி: டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ஐடென்டிட்டி. பெண்கள் உடை மாற்றும் அறையில் அவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் மர்மநபர் திடீரென கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை திரிஷா பார்த்து விடுகிறார்.

அவர் உதவியுடன் வினய் குற்றவாளியை விசாரிக்க டோவினோ தாமஸ் ஸ்கெட்ச் செய்பவராக வரும் ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. மலையாள படம் என்றாலும் தமிழிலும் இருக்கிறது.

எனக்கு தொழில் ரொமான்ஸ்: அசோக் செல்வன் மற்றும் அவந்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் எனக்கு தொழில் ரொமான்ஸ். உதவி இயக்குனராக இருக்கும் அசோக் செல்வன், நர்ஸாக இருக்கும் அவந்திகாவை காதலிக்கிறார். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் திடீர் பிரச்னைகள் தான் கதையே.

அரத பழசான கதை என்றாலும் டைம் பாஸாக பார்க்க செம எண்டெர்டெயின்மெண்ட்டு தான். இதை தொடர்ந்து ஆங்கிலத்தில் சில வெப் தொடர்களும் வெளியாகி இந்த வாரத்தை செமையாக எஞ்சாய் செய்யும் அளவுக்கு அமைந்து இருக்கிறது.

Next Story