கேம் சேஞ்சர் டூ காதலிக்க நேரமில்லை வரை… ஓடிடியில் இந்த வாரம் செம வேட்டைதான்…

OTT Release: ஓடிடி ரிலீஸில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கேம் சேஞ்சர்: ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் எழுத்தில் உருவான திரைப்படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் பாடல்கள் உருவாக படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருந்தது.
ஆனால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
தி கிரேட்டஸ்ட் ரிவல்ரி: இந்தியா vs பாகிஸ்தான்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்ய நிகழ்வு மினி வெப் சீரிஸாக வெளியாகி இருக்கிறது. சேவாக், கங்குலி, கவாஸ்கர், சோயப் அக்தர் உள்ளிட்டோரின் பேட்டிகள் அடங்கிய சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவி, வினய், நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கிய திரைப்படம் காதலிக்க நேரமில்லை. வித்தியாசமான திரைக்கதையை பேசிய இப்படம் குடும்ப ரசிகர்களுக்கு பெரிய அளவில் விருப்பத்தை கொடுக்கவில்லை.
சூப்பர்ஹிட் அடிக்கவில்லை என்றாலும் படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிப்ரவரி 11ந் தேதி வெளியாக இருக்கிறது. இளைஞர்களுக்கு இப்படம் பிடிக்கும் என்பதால் ஓடிடியில் ஹிட் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.
பேபி ஜான்: தமிழில் தெறி என்ற பெயரில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடம் பெரிய அளவு ஹிட் கொடுக்கவில்லை. வசூலிலும் பலத்த அடி வாங்கியது. இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.