1. Home
  2. OTT

OTT: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படங்களின் பக்கா லிஸ்ட்!..

ott
பல வருடங்களுக்கு முன்னர் தியேட்டர் ரிலீஸுக்கு அதிக காத்திருப்பு இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் ஓடிடி பெருகி விட்டதால் வார இறுதியில் அந்த அப்டேட்டுக்கே பலர் காத்திருக்கின்றனர்.

OTT: வார இறுதியில் வெளியாகும் ஓடிடி அப்டேட் திரைப்படங்கள் எப்பொழுதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கும். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் கணக்கு தான் அதிகமாக இருக்கிறது.

ஓடிடி வாரியாக இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட். அஜ்மல் மற்றும் யோகி பாபு நடிப்பில் அக்மார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக Accused  திரைப்படம் Aha ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பவன் கல்யாண் திரைப்படமாக வெளிவந்த நிறைய ஆக்சன் காட்சிகளுடன் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற They Call Him OG திரைப்படம் Netflix தளத்தில் வெளியாகிறது. இதே தளத்தில் Mob War Philadelphia Vs The Mafia ஆங்கில தொடரின் முதல் சீசனும், A House Of Dynamite திரைப்படமும் இதே தளத்தில் ரிலீஸாகிறது.

இந்த வார லிஸ்டில் இருக்கும் ஒற்றை தமிழ் படமாக hotstar ஓடிடியில்  விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தி திருமகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.  இதே ஓடிடியில் ஆங்கிலத் திரைப்படங்களான Neighborhood Watch, Ask Me What You Want, The Phoenician Scheme, The Hand That Rocks The Cradle வெளியாக இருக்கிறது. 

JumbooCircus என்ற மலையாள படமும், ParaiIsai Nadagam என்ற தெலுங்கு படமும் Sun Nxt வெளியாகவுள்ளது. மேலும் Prime ஓடிடியில் ஆங்கில படங்களான Holy Ghost,  The Bike Riders, Monster Summer உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் Zora என்ற இந்தி படம் Youtube தளத்திலும், Koodal என்ற மலையாள திரைப்படம் Simply South ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. 


 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.