இந்த வார ஓடிடி ரிலீஸ்… ஒன்னே ஒன்னுதான் தேறும் போலயே!.. ஃபீலிங்கா இருக்கே!..

by Akhilan |
ஓடிடி ரிலீஸ்
X
ஓடிடி ரிலீஸ்

OTT: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே ஓடிடியின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தியேட்டருக்கு படையெடுக்கும் ஒரு கூட்டம் இருக்கும் என்றால் ஓடிடிக்கு வரட்டும் பார்த்துக்கலாம் என சிலரும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி லிஸ்ட் குறித்த தகவல்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் இந்த வாரம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. நிகிலா, கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இப்படம் இன்று அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சபரி திரைப்படம் வெளியாக இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் நடிகர் விமல் நடிப்பில் போகும் இடம் வெகு தூரம் இல்லை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ரிபெல் திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடியில் இன்று அக்டோபர் 11ந் தேதி வெளியாக இருக்கிறது. விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 11 வெளியாகி இருக்கிறது..

Next Story