Categories: latest news OTT

OTT: ஓடிடியில் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் மலையாளம்… லிஸ்ட்டில் இத்தனை படங்களா?

OTT: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் பல மொழி படங்களின் இந்த வார அதிகாரப்பூர்வ லிஸ்ட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இந்த வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் லிஸ்ட்டில் இல்லை. ஆனால் பிற மொழியில் படங்கள் வெளியிட்டுக்கு தயாராகி இருக்கிறது. அந்த வகையில் ஜீ5 தொலைக்காட்சியில் மலையாளத்தில் Sumathi Valavu மற்றும் இந்தியில் Janaawar திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. 

ஹாட்ஸ்டார் ஓடிடியில் மலையாளத்தில் Hridayapoorvam, ஆங்கிலத்தில் Death Of A Unicorn, The Woman In The Yard, The Ballad Of Wallis Island, The Friend, Sundarakanda, Marvel Zombies ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

ghaati

மேலும், நெட்பிளிக்ஸில் இந்தியில் Son Of Sardaar 2 மற்றும் மலையாளத்தில் Odum Kuthira Chaadum Kuthira வெளியாக இருக்கிறது. சன் நெக்ஸ்ட்டில் கன்னடத்தில் Dheera Dhoora Yaana மற்றும் பேன் இந்திய படமான Meghalu Cheppina Prema Katha வெளியாக இருக்கிறது. 

பிரைம் ஓடிடியில் Ghaati, ஆங்கிலத்தில் Hotel Costiera, ஆங்கிலத்தில் Mom திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரும்பாலும் ஓடிடிக்கு தமிழ் ரசிகர்கள் அதிக பழக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வாரம் அவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சி இருப்பது சோகமான விஷயம்தான். 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily