OTTWatch: என்னப்பா இது வெப்சீரிஸா? கொலை சீரிஸா? பரபரப்புக்கு பஞ்சமில்லாத #AyyanaMane

OTTWatch: வெப்சீரிஸ் பிரியராக இருந்தால் உங்களுக்கு இந்த வாரம் செம டைம் பாஸாக அமைய ஜீ5 ஓடிடியில் இடம்பெற்று இருக்கும் அய்யனாமானே வெப் சீரிஸை பார்க்கலாம். அதன் பிளஸ் மற்றும் மைனஸ் பேசும் சுவாரஸ்ய தொகுப்புகள்.
திரில்லர் ஜானரில் மர்மமாக கதை சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கும் வெப்சீரிஸ் 6 எபிசோட்களை உள்ளடக்கி இருக்கிறது. ரமேஷ் இந்திரா எழுதி இயக்கி இருக்கும் இந்த வெப் சீரிஸ் கன்னடாவை மையமாக வைத்து வெளியானாலும் தமிழ் டப்பிங்கும் இருக்கிறது.
ஹீரோயின் ஜாஜி கல்யாணம் செஞ்சு வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது மாமனார் நெஞ்சை பிடிச்சிக்கிட்டு கீழே விழுந்து இறந்து விடுகிறார். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். மாமனார் இறந்தவுடன் சொந்தகளுக்கு சொல்லாமல் சுடுகாட்டில் எடுத்து புதைத்து விடுகின்றனர்.

முதல் இரண்டு மருமகள்களும் மூன்றாவது மகன் திருமணத்திற்கே வரவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் மூன்று மர்மமான மரணங்கள் நிகழ்கின்றன. இந்த மரணங்கள், குடும்பத்தின் தெய்வமான கொண்டைய்யா சிலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
ஹீரோயின் ஜாஜி, இந்த மர்மங்களை தீர்க்க முயற்சிக்கிறார். 1990களின் சிக்கமகளூரில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சீரியல் போல இழுக்கப்பட்டாலும் பல இடங்களில் ட்விஸ்ட் வேற ரகம் தான்.
அய்யனமனே, ஒரு மர்மமான குடும்ப கதையை, கலாசார அம்சங்களுடன் இணைத்து, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குஷி ரவியின் நடிப்பு, கதையின் மையமாக விளங்குகிறது.

முக்கியமாக இதன் தமிழ் டப்பிங், பின்னணி இசை செமையாக வந்து இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை சொல்ல இயக்குனர் முயன்று இருக்கிறார். ஒரு இடறல்கள் இருந்தாலும் பாக்க வொர்த்தான வெப் சீரிஸ் தான் மிஸ் பண்ணாதீங்க!