அமேசான் பிரைமில் மிஸ் பண்ண கூடாத தமிழ் ஹிட்ஸ்… இத நோட் பண்ணுங்க…
Amazon: தற்போது தமிழ் சினிமாவில் ஓடிடி காலம் தான் அதிகமாக இருக்கிறது. எல்லோரிடமும் சப்ஸ்கிரைப்ஷன் இருப்பது வழக்கமாகிவிட, நீங்கள் அமேசான் ப்ரைம் வைத்திருந்தால் இந்த படங்களை மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்கள்.
மாவீரன்: அமரன் படத்தில் வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெற்றி படமாக அமைந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கர் இப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அசிரீரி குரலை விஜய் சேதுபதி பேசியிருப்பார். தமிழ் சினிமாவில் போட்டி நாயகர்களான இவர்கள் ஒரே படத்தில் இணைந்தது படத்திற்கு பலமாக அமைந்தது.
அன்பிற்கினியாள்: அருண்பாண்டியனின் மகளும், அசோக் செல்வனின் மனைவியும் ஆன கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியானது இத்திரைப்படம். மலையாத்தில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் கீர்த்தியின் நடிப்பும் வரவேற்பை பெற்றது.
அருண்பாண்டியனே அப்பாவாக நடித்திருக்க மகளைக் காணாமல் அவர் பரிதவிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் குவித்திருந்தது. பிரைமில் மறக்காமல் இந்த படத்தை பார்த்து முடித்துவிடுங்கள்.
இமைக்கா நொடிகள்: நயன்தாரா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி மற்றும் அதர்வா முரளி உள்ளிட்ட பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம். இருந்தும் நடிகை நயன்தாராவிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவானத் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கிரைம் திரில்லர் ஜானரில் திரைப்படம் ரசிகர்களிடம் ஹிட் அடிக்க எந்த நேரம் பார்த்தாலும் போர் அடிக்காமல் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருப்பதில் இமைக்கா நொடிகள் எப்பயுமே ஹிட் அடிக்கும்.
ஜோசப்: கிரைம் திரில்லர் ஜானர் என கூறிவிட்டாலே தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் மலையாள சினிமாக்களில் தான் அதிக அளவில் திரைப்படங்கள் வெளியாகும். அப்படி வெளியான முக்கிய திரைப்படம் தான் ஜோசப்.
மனைவியின் இறப்பை கண்டறிய போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் முடிவு எப்படி இருக்கிறது என்பதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதை. இப்படம் பின்னர் தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
யூ டர்ன்: இயக்குனர் பவன் குமார் எழுதி இயக்கிய கன்னட திரைப்படமான இப்படத்தில் விதியை மீறிய இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓட்டுனரின் இறப்பிற்கு இரண்டு வழிச்சாலையில் நடந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் பத்திரிகையாளரின் கதையாக இப்படம் அமைக்கப்பட்டிருக்கும். தொடக்கத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.