OTT: ஹிட்டாச்சா? போர் அடிச்சிதா? சுழல் 2 வெப் சீரிஸ் எப்படி இருக்கு?

Suzhal S2: புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சுழல் 2 வெப் சீரிஸ் வெளியாகி இருக்கும் நிலையில் எப்படி இருக்கிறது என்ற விமர்சனம் தான் இது!
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் முதல் சீசன் ஹிட்டடித்தது. நீலகிரியில் வாழும் மக்கள் அங்காளம்மனை வேண்டுகின்றனர். 10 நாட்கள் நடக்கும் கதை. இன்னொரு புறம் கடத்தல், குழந்தை பருவ பிரச்னை எல்லாம் இருக்கிறது.
சீசன் 1 கிளைமேக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்து விடுகிறார். அதற்காக இரண்டாம் சீசனில் ஜெயிலில் இருக்கிறார். அவரை விடுவிக்க போராடுகிறார் போலீஸான சக்கரை.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்று சொல்ல முடியாது. ஆனாலும் பல இடங்களில் செம திரில்லராக அமைந்தது. கைது பண்ணப்பட்டு சிறையிலிருக்கும் ஐஸ்வர்யாவை விடுவிக்க சர்க்கரயால் ஓர் வக்கீல் நியமிக்கபடுகிறார்.
அவர் தான் பிரபல நடிகர் லால். ஆனால் அந்த வக்கீல யாரோ கொலை செஞ்சிட்றாங்க. இந்த கேஸும் நம்ம சர்க்கர கிட்டதான் விசாரணைக்கு வருது. விசாரணையில கிட்டத்தட்ட 8 பொண்ணுங்களுக்கு, வக்கீல் கொலையில் சம்மந்தம் இருப்பதாக தெரிகிறது.
ஆபாச வார்த்தைகள், சில முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். பல இடங்களில் எபிசோட்டை இழுப்பதற்காகவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 8 எபிசோட்கள் இருந்தாலும் ரொம்ப போர் அடிக்காமல் ஓரளவு ரசிக்கும்படியாகவே அமைக்கப்பட்டுள்ளது.