பொங்கலுக்கு சூப்பர் ஓடிடி ரிலீஸ்... ஓ இந்த படமும் வருதா? ரெடி ஆகுங்க மக்கா...

by Akhilan |
OTT
X

OTT Release: தமிழ் சினிமா ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட்.

தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் திரையரங்க வெளியீட்டை விட ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த அப்டேட்டுக்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் நிறைய தமிழ் படங்கள் வெளியாகி இருக்கிறது.

மிஸ் யூ: சித்தார்த் நடிப்பில் வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. இந்தியன்2 படத்தின் தோல்விக்கு பின்னர் வெளியானதால் படத்திற்கு பெரிய ரீச் கிடைக்கவில்லை. இருந்தும் இப்படம் தரமான காதல் கதை தான்.

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் இப்படம் பொங்கலுக்கு சரியான டைம் பாஸாக அமைந்துள்ளது. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க.

சூது கவ்வும் 2: மிர்ச்சி சிவா, எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சூது கவ்வும் 2. இப்படத்தின் முதல் பகுதி ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் ஹிட் என்பதால் இரண்டாம் பகுதிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் முதல் பகுதி கொடுத்த அந்த டிரேட் மார்க் சிரிப்பை இரண்டாம் பகுதி தவறிவிட்டது. இருந்தாலும் கண்டிப்பாக மிர்ச்சி சிவாவின் நடிப்புக்காகவே பார்க்க சூப்பர் திரைப்படம். ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

விடுதலை 2: வெற்றிமாறன் பல வருடங்களாக செதுக்கிய திரைப்படம் விடுதலை2. முதல் பகுதி சூரிக்காக இந்த பகுதி விஜய் சேதுபதிக்காக என்றே சொல்லும் அளவுக்கு எடுக்கப்பட்டு இருந்தது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் தோல்வியாக அமைந்தது.

இருந்தும், வெற்றிமாறனின் டைரக்‌ஷனுக்காக ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல எண்டெர்டெயிண்மெண்ட் தான். மிஸ் பண்ணாம வரும் 17ந் தேதி ஜீ5 ஓடிடியில் பார்க்க தவறாதீங்க.

பானி: தமிழ் படத்தை போலவே மலையாள படத்துக்கும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் பனி திரைப்படம் நாளை சோனி லைவில் வெளியாக இருக்கிறது. ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்த இப்படத்தில் தமிழ் நாயகி அபிநயா ஒரு முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.

ரைபிள் கிளப்: ஆஷிக் அபு இயக்கத்தில் தர்ஷனா ராஜேந்திரன், வாணி விஸ்வநாத், திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான இப்படம் ரத்த களறி ஃபைட்டிங்குடன் வித்தியாசமாக அமைந்துள்ளது. நாளை நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Next Story