நானி முதல் சூரி வரை… இந்த வாரம் இத்தனை படங்கள் ஓடிடி ரிலீஸா? அட தூள்!
OTT Release: ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் குறித்த விவரங்கள்.
விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக வெளியானது சரிபோதா சனிவாரம். இப்படத்தில் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். சனிக்கிழமைகளில் பிரச்சனைக்கு எதிராக போராடும் ஹீரோ, தவறான காவல்துறை அதிகாரியுடன் மோதிக் கொள்ளும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது இப்படம்.
நானியின் சினிமா கேரியரில் காஸ்ட்லியான படமாக பார்க்கப்படும் இது 100 கோடியை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் இப்படம் செப்டம்பர் 26 அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. காமெடி நடிகராக இருந்த சூரி ஹீரோ அந்தஸ்தை எடுத்துவிட்டார்.
அதன்படி அவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் தான் கொட்டுக்காளி. ரிலீஸுக்கு முன்னரே நிறைய பிலிம் பெஸ்டிவல் பார்த்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 27 அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் பாகத்தை எங்கும் பிசிறடிக்காமல் சரியாக தொடர்ந்தது டிமான்டி காலனி இரண்டாம் பாகம். இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த வருடத்தின் சிறந்த ஹாரர் படம் என்ற அந்தஸ்தை பெற்ற இப்படம் செப்டம்பர் 27 ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.