OTT: தனுஷின் இட்லி கடை முதல் லோக்கா வரை… ஓடிடியில் இந்த வார படங்களின் பக்கா அப்டேட்!
ஒரு காலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஓடிய பல ரசிகர்கள் இன்று பொறுமையாக ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் செம டிரிட் இருக்குப்பா, ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்த அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
தனுஷ், நித்தியா மேனன், சத்யராஜ் நடிச்சு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான Idli Kadai நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதே ஓடிடியில் ஆங்கில படங்களான Ballad Of A Small Player படமும், Aileen Queen Of The Serial Killersம் வெளியாக இருக்கிறது.
Netflixல் இந்த வாரம் The Witcher வெப்சீரிஸின் நான்காவது சீசனும், Selling Sunset 9வது சீசனும் வெளியாக இருக்கிறது. அதே போல மலையாள சினிமாவின் ரேஞ்சையே மாற்றிய Lokah Chapter 1 திரைப்படம் Hotstarல் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. மேலும், ஆங்கில படமான M3 gan2 வெளியாக இருக்கிறது. திரைப்படம் மட்டுமல்லாமல் IT Welcome To Derry வெப்சீரிஸின் முதல் சீசனும், May or Kingstown நான்காவது சீசனும் வெளியாகிறது.
அமேசான் Prime ஓடிடியில் தற்போது கன்னடத்தில் வெளியாகி சூப்பர் வெற்றியை குவித்து வரும் காந்தார முதல் சாப்டரை வெளியிட உள்ளனர். அதேபோல, ஆங்கில படமான Heddaம், மலையாள படமான Thalavaraம் ரிலீஸாகி இருக்கிறது. 
மேலும், Sun Nxt ஓடிடியில் Blackmail தமிழ் படம் வெளியாகிறது. ஆஹா ஓடிடியில் Usurae, Sotta Sotta Nanaiyuthu படமும் வெளியாகிறது. SimplySouth ஓடிடியில் தமிழ் படங்களான Maria மற்றும் மலையாள படமான Oru Ronaldo Chithram வெளியிடப்பட உள்ளது. Tentkotta ஒடிடியில் Kalyanam Dum Dum Dum வெப்சீரிஸும் ரிலீஸாகிறது.
