ஒன்னு இல்ல நாலு… இந்த வீக் எண்ட் மஜாதான்… இந்த வார ஓடிடி ரிலீஸ்…
OTT Release: தமிழ் ரசிகர்கள் சில ஆண்டுகளாகவே தியேட்டர் ரிலீஸை விட ஓடிடி ரிலீஸ் இருக்கு தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் குறித்த ஆச்சரிய தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் இந்த வாரம் ஓடிடிக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் கை கொடுத்தது. படம் ரிலீஸ் ஆகி முதல் சில நாட்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பின்னர் பெரிய அளவிலான வசூல் படத்திற்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. சியான் ரசிகர்கள் தற்போது படத்தை கொண்டாட தொடங்கி இருக்கின்றனர். 2020 ஆண்டு தி வைரல் ஃபீவர் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியான பஞ்சாயத்து தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். அதன் தமிழ் ரீமேக் இந்த வாரம் தலை வெட்டியான் பாளையம் என்னும் பெயரில் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
அபிஷேக்குமார், சேத்தன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோ இதில் முக்கிய இடத்தில் நடிக்க இருக்கின்றனர். ஹிந்தியில் பார்த்த தமிழ் ரசிகர்கள் கூட இதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. கொல்லி மலைக்கு ட்ரக்கிங் செல்லும் ஐந்து நண்பர் கூட்டத்தின் அந்த பயணத்தினை மையமாக வைத்து பேச்சி படம் உருவாகி இருக்கிறது.
ஹாரர் திரில்லர் ஜானலில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பால சரவணன், காயத்ரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் வெற்றி படமாக அமைந்த வாழ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அருள்நிதி மற்றும் பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற டிமான்டி காலனியின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேட்டை காத்திருப்பது உண்மை.