Categories: latest news OTT

செம ட்ரீட்டு.. சஸ்பென்ஸ் திரில்லரில் கதிகலங்க வைக்கும் டாப் 5 வெப் சீரிஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

நவீன உலகத்தில் OTT என்பது தவிர்க்க முடியாத entertainment platform-மாக இருக்கிறது. எப்போதும் காதல், ஆக்ஷன், காமெடி திரைப்படங்களை பார்த்து போர் அடித்த மக்களுக்கு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்கள் புது cinematic experience கொடுக்கும். அப்படி தரமான ஒரு ஐந்து வெப் சீரிஸ்களை தற்போது பார்க்கலாம்.

1. இதில் நாம் பார்க்க போகும் முதல் வெப் சீரிஸ் The mystery of moksha Island இந்த வெப் தொடர் hotstar ott தளத்தில் இருக்கிறது.

The mystery of moksha Island

Web series plot :

ஒரு தனித்தீவில் scientist ஒருவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று உடல் நலக் கோளாறால் இறந்து விடுகிறார். அடிப்படையில் இவர் பெரிய பணக்காரர் என்பதால் இறந்த பிறகு இவர் பெயரில் குடும்பத்தாருக்கு லெட்டர் ஒன்று சொல்கிறது.

நீங்கள் இந்த ஐலண்டுக்கு வரவேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அதில் எழுதி இருக்கிறது இதை படித்த குடும்பத்தார் அனைவரும் அந்த தீவுக்கு வருகிறார்கள். வந்த பிறகு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.

இதனால் ஒவ்வொருத்தராக இறக்கிறார்கள். கடைசியில் என்ன நடந்தது? ஏன் இவ்வாறு நடக்கிறது? என்பதை பரபரப்பாக இந்த வெப் சீரிஸ் இருக்கும். எதிர்பாக்காத பல திருப்பங்கள் இந்த கதையில் இடம் பெறும். ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் தான் இது.

2. அடுத்ததாக honeymoon photographer வெப் சீரிஸ். இது jio cinema OTT தளத்தில் இருக்கிறது. இது பக்கா crime thriller web series

honeymoon photographer

Web series plot :

Recent-டா கல்யாணம் முடிஞ்ச couple ஹனிமூனுக்காக ஒரு photographer book பன்னி கூட்டிட்டு போறாங்க. அவங்க ஒரு பெண். அங்க சில போட்டோஸ் எடுக்குறாங்க. அந்தப் பெண்ணிடம் புதுசா கல்யாணம் ஆன தம்பதியின் கணவன் தப்பாக நடக்கிறான்.

மறுநாள் காலையில் அந்த நபர் கொல்லப்படுகிறார். போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்திற்கு யார் காரணம்? என்ன ஆச்சு? என்பதுதான் இந்த வெப் சீரியஸின் கதையாக இருக்கும். ஒரு தடவை இதையும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

3. அடுத்ததாக manvat murders இது பக்காவான crime thriller web series. எழுபதுகளில் நடக்கும் பீரியட் கதைகளம். Sony live OTT தளத்தில் இந்த வெப் சீரிஸ் கிடைக்கிறது.

manvat murders

Web series plot :


ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து ஏழு கொலைகள் நடக்கிறது. ஒவ்வொன்றும் மிகவும் கொடூரமாக இருக்கும். போலீஸ் விசாரணை நடக்கிறது. இதுக்கு அப்புறம் ஒரு கொலை நடக்க கூடாது என்று தீவிரமாக விசாரிக்கிறார் அந்த போலீஸ்காரர். கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது ?என்பதை scene by scene மிகவும் சுவாரசியமாக நகரும். நடுவில் சில எபிசோடுகள் சிறிது சோர்வை ஏற்படுத்தினாலும் ஒரு தடவை must try இந்த வெப் சீரியஸ்.

4. அடுத்ததாக 1000 babies என்ற வெப்சில்தான். இது hotstar ott-ல் கிடைக்கிறது. இது ஒரு மலையாளம் வெப் சீரிஸ். மலையாளத்தை பொருத்தவரை கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அங்க கதைதான் ஹீரோ. அப்படி இதிலும் கதை ஸ்ட்ராங்காக இருக்கும்.

1000 babies

Web series plot :


மனநல பாதிக்கப்பட்ட ஒரு பாட்டியை அவரது பையன் பார்த்துக்கொண்டு வருகிறார். இந்த பாட்டி ஒரு காலகட்டத்தில் செவிலியராக வேலை பார்த்து இருப்பார். அப்போது நிறைய குழந்தைகளை மாற்றி மாற்றி கொடுத்துவிடுவார். இவரால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது அவர்களுக்கெல்லாம் 25 முதல் 30 வயது இருக்கும். இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக கொல்லப்படுகிறார்கள். எதற்காக இந்த கொலைகள் நடந்தது? ஏன் குழந்தைகளை மாற்றி வைத்தார் ? அதற்கான பதில் தான் இந்த வெப் சீரியஸின் கதையாக இருக்கும்.

5. அடுத்ததாக snakes and ladders இந்த வெப் சீஸ் Amazon prime ott தளத்தில் கிடைக்கிறது.

snakes and ladders

Web series plot :

நாலஞ்சு சின்ன பசங்க சேர்ந்த friends group இருக்காங்க. அதுல ஒரு பையன் வீட்ல திருடா ஒருத்தன் வந்திருப்பான். இந்தப் பையன் அந்த திருடனை பார்த்ததும் லாக் பண்ணி அடைச்சு வச்சுருவான். அந்த திருடனுக்கு wheezing problem இருந்ததால் அவன் மூச்சு திணறி இறந்து போகிறான். இதை இதை போலீஸிடம் சொன்னால் பிரச்சனை வரும் என்று அவன் நண்பர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அந்த டெட் பாடியை மூடி மறைக்கிறார்கள். அந்த திருடன் ஒரு பெரிய நெட்வொர்க்கிற்கு வேலை செய்து வருவான். அவனைக் காணவில்லை என்று அந்த நெட்வொர்க்கின் தலைவன் தேட ஆரம்பிக்கிறான். இதில் ஒரு பையனின் தந்தை போலீஸ். பசங்க ஏதோ தப்பு பண்ணி இருக்காங்க என்று அவருக்கு தெரிய வருகிறது.

அந்த நெட்வொர்க்கின் தலைவன் அந்தத் திருடனை கண்டுபிடித்தானா ? போலீசுக்கு இந்த கதையில் என்ன சம்பந்தம் இருக்கு? இதை எல்லாம் சொல்றதுதான் இந்த வெப் சீரிஸின் கதையாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த வெப் சீரிஸ் புது thriller experience கொடுக்கும். இதையும் ஒரு தடவை முயற்சி செய்யலாம்.

இந்த ஐந்து web series-ம் suspense-க்கு பஞ்சமில்லாமல் இருக்கும். கண்டிப்பாக சிறந்த பொழுதுபோக்குக்கான web series ஆக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G