விடாமுயற்சி பிளாப்… ஓடிடி அப்டேட் மூலம் கன்பார்ம் செய்த லைகா…

by Akhilan |
vidaamuyarchi
X

Vidaamuyarchi: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் சமீபத்திய திரைப்படமான விடாமுயற்சி ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சில நாட்களில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பது விக்னேஷ் சிவன் என கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அவர் சொன்ன கதையில் அஜித்திற்கு திருப்தி இல்லாத காரணத்தால் அவர் படத்தில் இருந்து விலக்கப்பட்டார்.

அவருக்கு பதில் பிரபல இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அவர் கதை சொல்வதற்கு முன்னாலே நடிகர் அஜீத் தனக்கு ஹாலிவுட் வெளியான பிரேக் டவுன் திரைப்படத்தை தான் ரீமேக் செய்ய வேண்டும் என்ற முடிவு இருப்பதாக தெரிவித்துவிட்டாராம்.

அவர் ஆசைப்பட்ட கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியது மட்டும்தான் மகிழ் திருமேனியின் வேலையாக இருந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் ரெஜினா கேரக்டர் உட்பட சில விஷயங்களும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த வேலைகள் முடியும் நிலையில் அஜித் உலக சுற்றுலா சென்று விட்டார்.

அவர் திரும்பி வருவதற்கே பல மாதங்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் நடத்தப்பட்டது. பலவித தடங்கல்களை தாண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தின் மொத்த சூட்டிங் படக்குழு முடித்திருக்கிறது.

பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சில பல பிரச்சனைகளால் அந்த ரேசிலிருந்து விலகுவதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் ஆறாம் தேதி இப்படத்தை வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டது.

ஆனால் முன்னெச்சரிக்கையாக இப்படத்தில் அஜித்தின் மாஸ் விஷயங்கள் எதுவும் இருக்காது என இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். அவருக்கு பழக்கப்பட்ட ஏரியாவில் இருந்து விலகி வித்தியாசமான கதையில் நடித்திருப்பதாகவும் தொடர்ந்து தன்னுடைய பேட்டிகளில் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் சில ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் மட்டும் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.

படம் தமிழகத்தில் 100 கோடி வசூலை கூட தாண்ட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெற்றி படங்கள் 6 வாரம் கழித்து மட்டுமே ஓடிடிக்கு வெளியாகும். ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் நாலு வாரங்கள் முடியாத நிலையில் கூட வரும் மார்ச் 3ந் தேதியே நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட இருக்கிறது.

Next Story