ரொம்ப சீக்கிரமா விடுறீங்களே… விக்கி-நயன் கல்யாண வீடியோ ரிலீஸ் தேதியை சொன்ன நெட்பிளிக்ஸ்..

by Akhilan |
ரொம்ப சீக்கிரமா விடுறீங்களே… விக்கி-நயன் கல்யாண வீடியோ ரிலீஸ் தேதியை சொன்ன நெட்பிளிக்ஸ்..
X

Nayanthara: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அடையாளப்படுத்தப்பட்டு வந்த நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திருந்தார். இந்த வீடியோ பல வருட தாமதத்திற்கு பின்னர் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நடிகை நயன்தாரா வளர்ந்து வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஒரு நெருக்கம் உருவானது. இது பின்னர் காதலாக மாறியது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முக்கிய விழா நாட்களில் அவர்கள் போடும் ஜோடி புகைப்படத்திற்காகவே பல ரசிகர்கள் காத்திருந்த காலங்களும் உண்டு.

இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மார்க்கை சரிந்து கொண்டிருந்ததை நயன்தாரா கணித்துவிட்டார். இதனால் தன்னுடைய திருமணத்திலிருந்து மிகப்பெரிய அளவில் வருமானத்தை எடுத்து விட வேண்டும் என முடிவு செய்திருந்தார்.

இதனால் அவருடைய திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் வெளியிட முடிவெடுத்தார். பாலிவுட் பிரபலங்கள் கையாளும் இந்த யுத்தியை முதல் முறையாக தமிழில் நயன்தாரா எடுத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தங்களுடைய நெருக்கமான உறவுகளுக்கு மத்தியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் இரண்டு வருடங்களை கடந்தும் திருமண வீடியோ குறித்த எந்த அறிவிப்பும் இரு தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை. இதில் விக்னேஷ் சிவன் தங்களுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது.

இதைத்தொடர்ந்து 6 மாதத்தில் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு வாடகை தாய்முறையில் பெற்றோர்கள் ஆனதும் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் தற்போது இரண்டு வருடங்கள் கழித்து நயன்தாராவின் திருமண வீடியோ நவம்பர் 18ஆம் தேதி அவருடைய பிறந்தநாளில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.





Next Story