அண்ணே… இப்படி இறங்கியா சம்பவம் பண்ணுவீங்க… விஜய் சேதுபதியின் அடுத்த திட்டம் இதானாம்!

Vijay Sethupathi: கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் புராஜெக்ட் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தன்னுடைய நண்பர்களான நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் மூலம் வரவேற்பு பெற்றார்.
அவருக்கு தொடர்ச்சியாக சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது. செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் தனுஷின் தோழராகவும், பிரபு சாலமனின் லீ, சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படங்களில் துணை வேடத்தில் நடித்தார்.
இதையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் அவர் வாழ்க்கையை மாற்றியது. நடிகராக தொடர் வாய்ப்புகள் குவிந்தது. சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார்.
இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மாற்றியது. சூப்பர்ஹிட் படமாக அமைய அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் குவிந்தது. தொடர்ச்சியாக கிடைத்த படங்களை ஒப்புக்கொண்டு ஒரு வருடத்தில் 6 படங்கள் வரை நடித்தார்.
தொடர்ந்து, புஷ்கர் காயத்தில் இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அங்கிருந்து இன்னொரு அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமாவின் மாஸ் வில்லனாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் வரை எல்லாருக்குமே வில்லனாக நடித்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் ஐம்பதாவது திரைப்படமாக உருவான மகாராஜா மிகப்பெரிய வெற்றியை குறித்தது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவின் மட்டுமல்லாமல் சீனா அவரை படத்தின் புகழ் மிகப்பெரிய அளவில் கொடிகட்டி பறந்தது. கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படைப்பாக இத்திரைப்படம் அங்கீகரிக்கப்பட்டது.
இது தொடர்ந்து விஜய் சேதுபதி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இது மட்டுமல்லாமல் தற்போது அடுத்த கட்டமாக ஹாட்ஸ்டார் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மணிகண்டன் இயக்கும் இப்படத்திற்கு முத்து என்கிற காட்டான் என பெயர் வைக்கப்படலாம் எனவும் கூறப்படும் நிலையில் ஷூட்டிங் இம்மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.