அதான இன்னும் வலைய விரிக்கலையேனு பாத்தேன்! அலேக்கா ‘மஞ்சுமெல் பாய்ஸை’ தட்டி தூக்கிய தயாரிப்பாளர்

Published on: March 4, 2024
manju
---Advertisement---

Manjummel Boys: இன்று அனைவரும் கேட்கக் கூடிய பாடலாக மாறியிருக்கிறது குணா படத்தில் அமைந்த ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. அதுவரை காதலர்களால் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பாடலை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம்தான்.

மலையாளத்தில் சிதம்பரம் என்ற இயக்குனரால் எடுக்கப்பட்ட படம்தான் மஞ்சுமெல் பாய்ஸ். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் குணா குகையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமே இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். 2006 ஆண்டுக்கு முன்புவரை அந்த குகையில் கிட்டத்தட்ட அரசு ரிக்கார்டு படி 16 பேர் அந்த குகையில் உள்ளே விழுந்து மாயமாகியிருக்கின்றனர்.

இதையும் படிங்க: முதல் முறையாக 50 கோடியை சுருட்டி 2கே கிட்ஸை கவர்ந்த அந்த 3 படங்கள்!.. கெத்து காட்டும் ரஜினி…

2006 ஆம் ஆண்டு விழுந்த ஒரு கேரளா சுற்றுப்பயணி மட்டும்தான் உயிரோடு வந்திருக்கிறார். இந்த சம்பவத்தை வைத்துதான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தயாராகியிருக்கிறது. இதை கதையாக திரைப்படமாக மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறார் சிதம்பரம். கொடைக்கானலில் குணா குகையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதால் படத்தில் கமலின் அந்த குணா பாடலையும் சேர்த்திருக்கிறார்கள்.

அதுதான் அந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக மாறியிருக்கிறது. ஏனெனில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சனி, ஞாயிறு என இரண்டு நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 850 ஸ்க்ரீன்களில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. பல கோடி வசூலையும் அள்ளியிருக்கிறது. இதற்கு முன்புவரை மற்ற மொழி சினிமாவை தமிழ் ரசிகர்கள் இப்படி கொண்டாடியது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ஒருத்தருக்கு ரசிகர்னாலே கண்டம்.. ஆனால் ரசிகர்களுக்காக சூர்யா செய்த மாஸ் சம்பவம்

இந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை எடுத்த இயக்குனர் சிதம்பரத்திற்கு கோலிவுட்டில் இருந்து அழைப்பு சென்றிருக்கிறது. இந்தப் படம் தயாரிப்பு பணியில் இருக்கும் போதே படம் கண்டிப்பாக வெற்றியாகும் என்பதை உணர்ந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படம் வெளியாவதற்கு முன்பே இந்த இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தமிழ் பட தயாரிப்பாளர் ஒரு மலையாள இயக்குனர். அதனால் இவர்கள் இணையும் படம் தமிழ்படமா? இல்லை மலையாள படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.