ஓவர் அலப்பறை கூட்டிய வாரிசு நடிகை… அடக்கி உட்கார வைத்த தந்தை…. இதுதான் காரணமாம்…..!

Published on: March 25, 2022
tamil actress
---Advertisement---

திரையுலகில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பஞ்சமே கிடையாது. நாளுக்கு நாள் புதிது புதிதாக களமிறங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு புதிதாக தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கி உள்ளவர் தான் அந்த வாரிசு நடிகை. தனது பிரம்மாண்ட தந்தையின் செல்வாக்கு மூலம் பெரிய நடிகரின் படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார் அந்த வாரிசு நடிகை.

அவரின் முதல் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே எப்படியாவது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதிக்க போவதாக சவால் விட்ட அந்த வாரிசு நடிகை அடுத்தடுத்து கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்ய அதிகமான டிரோல்கள் தான் கிடைத்தது.

tamil actress

இருப்பினும் அதையெல்லாம் எப்படியோ சமாளித்த நடிகைக்கு புதிதாக ஒரு பிரச்சனை உருவானது. அதன்படி தன்னைத் தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி வரும் அந்த ரியாலிட்டி ஷோ நடிகை தற்போது பிரம்மாண்ட தந்தையின் வாரிசு நடிகையை பற்றியும் தேவையில்லாத பேச்சுக்களை பேசி வர இந்த விஷயம் பிரம்மாண்ட தந்தையின் காதுக்கு சென்று விட்டதாம்.

இதனால் கடுப்பான தந்தை தனது மகளை அழைத்து சினிமாவில் உன்னை எப்படி பிரபலப்படுத்த வேண்டும் என்பதை நான் தான் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறேனே? பிறகு ஏன் தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் நேரம் செலவழித்து கண்டவர்களிடம் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்கிறாய்? என லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

அதுவரை தன்னை ஒரு டாப் ஹீரோயினாக நினைத்து அலப்பறைகளை கூட்டி வந்த அந்த வாரிசு நடிகை தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்க அவரது தந்தையின் கண்டிப்பு தான் காரணமாம்.

Leave a Comment