Connect with us
kamal

Cinema News

ஓவர் ஹைப் ஏத்தி ரசிகர்களை கதறவிட்ட 4 திரைப்படங்கள்!.. இதுல இந்தியன் 2 வேறலெவல்!..

சினிமாவில் ஆரம்பகாலங்களில் இருந்து எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் வெற்றிப்படங்களாகவோ ஒரு சில படங்கள் தோல்விப் படங்களாகவோ அமைந்திருக்கின்றன. சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் மக்களை நிச்சயமாக கவரும் என்ற ஒரு பிம்பம் இருந்து வருகிறது. ஆனால் அது சில நேரங்களில் காலை வாரியும் விட்டிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஹைப்பை ஏற்படுத்தி அந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தியேட்டரில் போய் பார்க்கும் போது எல்லாமே புஷ்ஷுனு போய்விடும். அப்படி தமிழ் சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்து ரிலீஸுக்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நான்கு திரைப்படங்களை பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: ரஜினி படத்துல மட்டும் நடிப்பீங்க!… விஜய் படத்துல நடிக்க முடியாதா?!… இப்ப எங்க போச்சு உங்க கொள்கை!…

ஜப்பான்: கார்த்தியின் கெரியரில் 25வது படமாக அமைந்ததுதான் இந்த ஜப்பான் திரைப்படம். கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இவர்களுடன் புஷ்பா பட நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரம்பத்தில் கொள்ளை, விசாரணை என விறுவிறுப்பாக ஓடினாலும் கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கு பின் படம் தொய்வையே சந்தித்தது.

கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்நியன் , தசாவதாரம் வரிசையில் கோப்ரா படத்தில் விக்ரம் பலவித கெட்டப்களை போட்டு நடித்தார்.

Cobra

Cobra

சுமார் 8 கெட்டப்களில் விக்ரம் இந்தப் படத்தில் வருவார். படம் வெளியாவதற்கு முன் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இன்னொரு பக்கம் இமைக்கா நொடிகள் இயக்குனர் என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் படத்தின் நீளம், சில காட்சிகளில் லேக் என பார்ப்பவர்களை எப்படா முடிப்பீங்க என்றளவுக்கு திணறடித்து விட்டது கோப்ரா.

இதையும் படிங்க: Amaran: இது நான் முகுந்துக்கு செய்யும் அஞ்சலி!. சம்பளமே வாங்காம அமரன் படத்தில் நடித்தவர் நெகிழ்ச்சி!..

இந்தியன் 2: 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி பெரிய டிரெண்ட் செட்டரை உருவாக்கிய திரைப்படம் இந்தியன்.இதற்கு நேர் எதிராக அமைந்தது இந்தியன் 2. படம் வெளியாகி பல வித டிரோலுக்கும் ஆளாகியது. முழுக்க நெகட்டிவ் கமெண்ட்களே இந்தப் படம் சந்தித்தது. இன்னொரு பக்கம் சித்தார்த்தை ஆரம்பத்தில் காட்டி படத்தை போராக காட்டினர். உண்மையிலேயே இந்தியன் தாத்தா எங்களை கதற விட்டாரு என்று அழாத குறையா ரசிகர்கள் சென்றனர்.

ayalan

அயலான் : இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் அயலான் திரைப்படம் வெளியாகுமா ஆகாத என்ற சிக்கலிலேயே இருந்தது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்தான் இந்தப் படத்தையும் இயக்கினார். சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு டெம்பிளேட் இருக்கிறது. அது அவ்வப்போது இந்தப் படத்தில் மிஸ் ஆகியது. இருந்தாலும் மேலே சொன்ன அந்த மூன்று படங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் படம் ஓகே என்ற அளவுக்குத்தான் இருந்தது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top