Kanguva: கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி என்ன கூறியிருக்கிறார் என்பதை பற்றி பார்ப்போம். கங்குவா என்பது பாகுபலி படத்தை பார்த்து சூடு போட்டுக் கொண்ட ஒரு பூனை தான் கங்குவா. கங்குவா படத்தின் துவக்க புள்ளி என்ன? அது எப்படி அடுத்த லெவலுக்கு சென்றது? எப்படி அது ஒரு பீரியட் திரைப்படமாக மாறியது என்பதை பற்றி சமீப காலமாக கூறி வருகிறேன்.
வீடியோ கேம்: கங்குவா படத்தை பொருத்தவரைக்கும் அவர்களின் கனவாக இருப்பது பாகுபலி போன்று பெரிய அளவில் காசை அள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதற்கான விஷயம் இந்த படத்திற்குள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி இப்போது வந்த ட்ரெய்லர் வரைக்கும் பார்த்தீர்கள் என்றால் ஒரு வீடியோ கேம் போன்ற பிம்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கின்றது.
இதையும் படிங்க: Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…
பாகுபலி படத்தை போன்ற ஒரு உணர்வை தரவே இல்லை. இவர்கள் ஆசைப்பட்டது ஒன்று. நடந்தது வேற ஒன்னு. அதேபோல் படத்தை எடுத்தவர்களுக்கு படத்தில் உள்ள மைனஸ் தெரிந்தாலும் ரிலீசுக்கு முன்பு அதை பெரிதாக வெளியில் சொல்ல மாட்டார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து ஒரு பெரிய பில்டப் கொடுத்து எப்படியாவது மக்கள் தலையில் கட்ட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
15000 ஸ்க்ரீன்:இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த மாதிரி தான் கங்குவாவை பொறுத்தவரைக்கும் ஓவர் பில்டப் களை கொடுத்து வருகிறார்கள். இந்த பில்டப் எங்கிருந்து தொடங்கியது என்றால் இந்த படம் 2000 கோடி வரை வசூல் செய்யும். 50 மொழிகளில் வெளியிடப் போகிறோம். 15,000 ஸ்கிரீனில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என மிகவும் மிகைப்படுத்தி பேசி வருகிறார்கள். இதுவே இந்த படத்தின் மீதான சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
இப்படி ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வேட்டையன் படம் ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என முடிவெடுத்து வைத்திருந்தார்கள். அதை அறிந்து கொண்டே கங்குவா பட குழுவும் அதே தேதியை லாக் செய்தனர். 2000 கோடி வசூல் செய்யும் என உறுதியாக நம்பும் அவர்கள் ரஜினியின் வேட்டையன் படத்தோடயே ரிலீஸ் செய்திருக்கலாம் அல்லவா.
இதையும் படிங்க: Kanguva: ஒரே ஒரு போன் கால்!.. கங்குவா சிறப்பு காட்சிக்கு பர்மிஷன் வாங்கிய சூர்யா!.. செம மேட்டரு!..
ரஜினிக்கான மரியாதை:ஆனால் அதை செய்யவில்லை. அதற்கு காரணம் கேட்டால் ரஜினி மீதி இருக்கும் மரியாதை என கூறி சமாளித்தார்கள். சரி அதை விட்டு அடுத்த சரியான தேதி என்றால் அது தீபாவளி தான். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் ஒரே ஒரு படம் தான் ரிலீஸ் ஆனது. அந்த தேதியிலாவது இவர்கள் ரிலீஸ் செய்திருக்கலாம். ஆனால் அதையும் விட்டு விட்டார்கள். இதிலிருந்து நீங்கள் சொல்வதற்கும் இந்த படத்தில் இருக்கும் கண்டன்டிற்க்கும் ஏதோ சில முரண்பாடு இருப்பதாகவே தெரிகிறது .
அது மட்டுமல்லாமல் சூர்யாவும் இந்த படத்திற்காக பெரிய அளவில் மிகைப் படுத்தியே பேசி வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்திலும் இப்படித்தான் ஓவர் பில்டப் கொடுத்தார்கள். அஞ்சான் திரைப்படத்திற்கும் ஓவர் பில்டப் கொடுத்தார்கள். கடைசியில் என்ன ஆனது என்பது அனைவருக்குமே தெரியும் .அதைப்போல இந்த படத்திற்கும் சூர்யா அவருடைய ஒவர் கான்பிடன்ஸை வெளிப்படுத்தி வருகிறார். ஏனெனில் விஜய் ஒரு பக்கம் அரசியலில் நுழைய அஜித் ஒரு பக்கம் கார் ரேஸில் பிஸியாக இருக்க அந்த இடத்தை எப்படியாவது நிரப்ப வேண்டும் என்ற ஒரு முனைப்பில் கூட இருக்கலாம் என பிஸ்மி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…