சிம்புவோட பொண்டாட்டியா நான்...? கடுப்பாகி கத்திய ஓவியா...!
தமிழ் சினிமாவில் ஒரு ரீஎன்ரி கொடுத்ததன் மூலம் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.
மாநாடு படம் அவரது வாழ்க்கையையே திருப்பி போட்டது என கூறலாம். பெரிய அளவில் பேசப்பட்ட படம் மாநாடு.
பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலை பெற்றது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது தந்தை உடல் நலக்குறைவால் தந்தையின் பக்கத்தில் இருந்து அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ஓவியாவிடம் சிம்புவை பற்றி ஒரு நிரூபர் கேட்ட கேள்வி அவரை எரிச்சலடைய வைத்தது. சிம்புவை பற்றி தெரிந்த அல்லது தெரியாத சில விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஓவியா சிம்புவிற்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர். சிலருடன் பிரேக் அப் ஆகியிருக்கிறது. தற்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என கூற நிரூபர் ஆம். வேற என கேட்க அதற்கு ஓவியா நான் சிம்புவிற்கு பொண்டாட்டியா என ஆங்கிலத்தில் கேட்டார். ஏதோ அவரை ஓரளவிற்கு உங்களை போல் தான் எனக்கும் தெரியும். கூடவே இருந்தால் போல் கேட்கிறீங்க என டென்ஷன் ஆகிவிட்டார்.