ஓவியா எப்படி மாறியிருக்கிறார் தெரியுமா..? அவரின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் ஆறுதல்
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை ஓவியா தமிழ்திரையுலகில் நடிகர் விமலுடன் களவாணி படத்தில் அறிமுகமானார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு தான் முதன் முதலில் ஆர்மி உருவாகியது.
ரசிகர்களின் பேராதரவு இருந்தும் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் திரும்பவும் ஒரு ரவுண்ட் அடித்தார். ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டிய இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு பீஜ் ரெஸ்டாரன்டில் வித்தியாசமான தோற்றத்துடன் ஸ்நேக்ஸ் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் நாங்க ஏதோ பழக்கடைகாரினு நினைச்சோம் என்று பதிலுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.