Cinema History
எம்ஜிஆர் மீது வந்த கோபம்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய இயக்குனர்.. அப்புறம் நடந்தது இதுதான்!..
சிவாஜிக்கு ஒரு பீம்சிங் மாதிரி எம்ஜிஆருக்கு இருந்த இயக்குனர் ப.நீலகண்டன். இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். நீதிக்கு தலைவணங்கு, ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு, ஒரு தாய் மக்கள், குமரி கோட்டம், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், கண்ணன் என் காதலன் என எம்ஜிஆரை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன்.
என்ன தான் பிரண்ட்ஷிப் இருந்தாலும் கருத்து வேறுபாடு என்பது வரத்தானே செய்யும். அது அண்ணன் தம்பி, தந்தை மகன், அம்மா பிள்ளை, கணவன், மனைவி, ஆசிரியர், மாணவன், வேலைக்காரன் முதலாளி என யாரையும் விட்டு வைக்காது. அப்படித்தான் இயக்குனர் ப.நீலகண்டனுக்கும், நடிகர் எம்ஜிஆருக்குமே ஒரு தடவை கருத்து வேறுபாடு வந்து விட்டது. என்ன என்று பார்ப்போமா…
எம்ஜிஆருக்கும், இயக்குனர் ப.நீலகண்டனுக்கும் ஒரு படத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. படப்பிடிப்பின் போது அவர் வெளியே வந்து ‘வண்டியை வரச் சொல்லப்பா… நான் இதோடு போறேன்… எனக்கு இதுக்கு மேல இந்தப் படத்தை டைரக்ட் பண்ண விருப்பமில்லை’ என்று கோபித்துக் கொண்டாராம் இயக்குனர்.
ஆனால் அவருக்கு நல்ல நேரம் இருந்தது. அங்கு அன்று அந்த டிரைவர் இல்லை. அந்த சமயத்தில் அவரது உதவியாளர் ம.லெட்சுமணன் அங்கு வந்தாராம். உங்களுக்கு எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கு? அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணனும்? இன்னைக்கு எம்ஜிஆர் எவ்வளவு பெரிய மார்க்கெட்ல இருக்காருன்னு உங்களுக்குத் தெரியும்.
அவரை எதிர்த்துக் கொண்டு நீங்கள் போவது நியாயமான்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்கன்னு சமாதானம் செய்தாராம். அப்போது தான் தன் நிலையை உணர்ந்த ப.நீலகண்டன் மீண்டும் அந்தப் படத்தை இயக்க சென்றாராம். தொடர்ந்து எம்ஜிஆரின் பல படங்களை இயக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.