சிவாஜிக்கு ஒரு பீம்சிங் மாதிரி எம்ஜிஆருக்கு இருந்த இயக்குனர் ப.நீலகண்டன். இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். நீதிக்கு தலைவணங்கு, ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு, ஒரு தாய் மக்கள், குமரி கோட்டம், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், கண்ணன் என் காதலன் என எம்ஜிஆரை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன்.
என்ன தான் பிரண்ட்ஷிப் இருந்தாலும் கருத்து வேறுபாடு என்பது வரத்தானே செய்யும். அது அண்ணன் தம்பி, தந்தை மகன், அம்மா பிள்ளை, கணவன், மனைவி, ஆசிரியர், மாணவன், வேலைக்காரன் முதலாளி என யாரையும் விட்டு வைக்காது. அப்படித்தான் இயக்குனர் ப.நீலகண்டனுக்கும், நடிகர் எம்ஜிஆருக்குமே ஒரு தடவை கருத்து வேறுபாடு வந்து விட்டது. என்ன என்று பார்ப்போமா…
எம்ஜிஆருக்கும், இயக்குனர் ப.நீலகண்டனுக்கும் ஒரு படத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. படப்பிடிப்பின் போது அவர் வெளியே வந்து ‘வண்டியை வரச் சொல்லப்பா… நான் இதோடு போறேன்… எனக்கு இதுக்கு மேல இந்தப் படத்தை டைரக்ட் பண்ண விருப்பமில்லை’ என்று கோபித்துக் கொண்டாராம் இயக்குனர்.
NTV
ஆனால் அவருக்கு நல்ல நேரம் இருந்தது. அங்கு அன்று அந்த டிரைவர் இல்லை. அந்த சமயத்தில் அவரது உதவியாளர் ம.லெட்சுமணன் அங்கு வந்தாராம். உங்களுக்கு எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கு? அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணனும்? இன்னைக்கு எம்ஜிஆர் எவ்வளவு பெரிய மார்க்கெட்ல இருக்காருன்னு உங்களுக்குத் தெரியும்.
அவரை எதிர்த்துக் கொண்டு நீங்கள் போவது நியாயமான்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்கன்னு சமாதானம் செய்தாராம். அப்போது தான் தன் நிலையை உணர்ந்த ப.நீலகண்டன் மீண்டும் அந்தப் படத்தை இயக்க சென்றாராம். தொடர்ந்து எம்ஜிஆரின் பல படங்களை இயக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…
தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…