குருநாதருக்காக சந்திரமுகியை விட்டுக் கொடுத்த லாரன்ஸ்!.. அப்போ அவரோட கதி?..
பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டு வருகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா, கங்கனா ரனாவத் போன்றோரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பி.வாசு சந்திரமுகிக்கு அப்புறம் மீண்டும் ரஜினியை வைத்து படம் பண்ணவேண்டும் என்று நீண்ட நாள்களாக ஆசையில் இருந்தார். அதனால் ரஜினி இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து சிபி சக்கரவர்த்தியுடம் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க : “என்ன நடந்தாலும் இதை மட்டும் பண்ணிடாதீங்க”… தனது பிள்ளைகளிடம் சத்தியம் வாங்கிய சூப்பர் ஸ்டார்… என்னவா இருக்கும்??
ஆனால் ரஜினியின் அடுத்த படத்தை பி. வாசு தான் இயக்குகிறாராம். லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. அதனால் லைக்கா நிறுவனம் பி.வாசுவிடம் சீக்கிரம் படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து கொடுக்கும் படி அவரை துரிதப்படுத்த ஏற்கெனவே பி.வாசு சந்திரமுகி-2 படத்தில் பிஸியாக இருப்பதால் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
சந்திரமுகி - 2 படத்தின் படப்பிடிப்பை இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைத்து விட்டு தன் வீட்டிலேயே ரஜினி படத்தின் கதை ஆலோசனையில் ஈடுபடப் போகிறாராம். அந்த சமயம் லாரன்ஸ் ஏற்கெனவே ருத்ரன் படம் கிடப்பிலேயே இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
ருத்ரன் படப்பிடிப்பு பொங்கல் அன்று இரவு நேரத்தில் இருந்து சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறதாம். இந்த இடைப்பட்ட காலத்தில் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார் லாரன்ஸ். தன் குருநாதரான ரஜினிக்காக சந்திரமுகி படத்திற்கு சிறிது நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் லாரன்ஸ்.