நீ நடிக்கவே வேண்டாம்!. வடிவேலுவை லெப்ஃட் ஹேண்டில் டீல் செய்த பி.வாசு!. சந்திரமுகி 2 படப்பிடிப்பில் களோபரம்..
வடிவேல் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். கஷ்டப்பட்டு பலரிடமும் வாய்ப்பு கேட்டு ராஜ்கிரணிடம் தஞ்சமடைந்து அவரின் உதவியால் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இவர். அதன்பின் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ரெக்கமண்ட் செய்து இவருக்கு வாய்ப்புகளை வாங்கி கொடுத்தனர். இப்படித்தான் வளர்ந்தார் வடிவேலு. பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார். இவரின் பல காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. வைகைப்புயல் என்கிற அடைமொழியும் இவருக்கு கிடைத்தது.
வடிவேலு சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த போது கூட இவரை வைத்துதான் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வலம் வந்தது. எல்லாவிதமான உணர்வுக்கும் வடிவேல் கொடுத்த ரியாக்ஷன்கள் பொருத்தமாக இருந்தது. இப்போதும் இது தொடர்கிறது. ஆனால், கடந்த வருடங்களாக வடிவேலுக்கு நல்ல படியாக அமையவில்லை. ஏனெனில், கடந்த ஏழெட்டு வருடங்களில் அவர் நடித்த திரைப்படங்கள் மிகவும் குறைவு. மேலும், அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. அதற்கு காரணமாக இருந்ததும் வடிவேல்தான்.
ரசிகர்களுக்கு வடிவேலுவை சிரிக்க வைக்கும் ஒரு நடிகராக மட்டுமே தெரியும். அவரின் நிஜ சுபாவங்கள் எப்படி பட்டது?.. படப்பிடிப்பில் இயக்குனர்களை எப்படி போட்டு பாடாய் படுத்துவார்?.. உடன் நடிக்கும் சக காமெடி நடிகர்களை எப்படி ட்ரீட் செய்வார்? என்பதெல்லாம் தெரியாது. அதேபோல், மிகவும் தலைக்கணத்துடன் நடந்து கொள்வார் என்பதும் திரையுலகினருக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் ஒரு கட்டத்தில் அவரை திரையுலகம் கைவிட்டது.
சினிமாவில் மீண்டும் நடிக்கவந்த போது சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானர் வடிவேலு. ஆனால், படப்பிடிப்பு சரியாக செல்லமாட்டாராம். அப்படியே போனாலும் கொஞ்ச நேரம் மட்டுமே நடித்துவிட்டு சென்று விடுவாராம். இவருக்காக அப்படத்தின் இயக்குனர் பி.வாசுவும், ராகவா லாரன்ஸும் முடிந்தவரை பொறுத்து போயிருக்கிறார்கள். சந்திரமுகி படத்தில் ரஜினி உடன் பல காட்சிகள் இருப்பது போல, சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்ஸுடன் பல காட்சிகளில் வடிவேல் வருவது போலத்தான் திரைக்கதை எழுதியிருந்தார் பி.வாசு. ஆனால், வடிவேல் கொடுத்த குடைச்சலில் அவரின் காட்சிகள் குறைக்கப்பட்டது. அதன்பின்னரும் வடிவேல் குடைச்சல் கொடுக்க சமீபத்தில் அது பெரிய சண்டையில் முடிந்துள்ளது.
இந்த காட்சியோடு சரி. இனிமேல் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என வடிவேலு முரண்டு பிடிக்க கடுப்பான பி.வாசு வடிவேலுவின் முகத்தை பார்க்காமலேயே ‘இப்போதே நீ இங்கிருந்து சென்று விடு’ என சொல்வது போல் லெஃப்ட் ஹேண்ட்டில் (இடது கையால்) சைகை செய்ய வடிவேலுவுக்கு அசிங்கமாக போய் விட்டதாம். இதை தனது சகாக்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்.
எத்தனை நாளைக்குதான் வடிவேலுவின் நடத்தையை இயக்குனர்கள் பொறுத்துக்கொள்வார்கள்!..