சூப்பர்ஸ்டாருக்கு திடீரென வந்த ஆசை!.. உடனே அனுப்பிய மயில்சாமி!.. என்னா மனுஷன்யா!..
காமெடி நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் உலுக்கியது. அதை விட அவரால் சாப்பிட்ட, உதவிகள் பெற்ற திரைக்கலைஞர்கள் பலரும் அவருக்காக கண்ணீர் விட்டனர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி கடைசிவரை எல்லோருக்கும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற கொள்கையில் வாழ்ந்தவர்.
அவர் கண் முன் யாரும் பசியோடு இருக்க கூடாது என நினைப்பவர். சின்ன சின்ன காமெடி நடிகர்களுக்கு வாடகை, குழந்தைகளின் பள்ளி செலவு, மருத்துவ செலவு என எந்த உதவி கேட்டாலும் உதவுவார். குறிப்பாக, தன்னிடம் இல்லை என்றாலும் நடிகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டு வாங்கி அவர்களுக்கு உதவி வந்துள்ளார். உடன் நடிக்கும் நடிகர்கள் ஏதேனும் சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டால் அது எந்த ஊராக இருந்தாலும் சரி அங்கு வசிக்கும் மக்களிடம் பேசி அவரே சமைத்து கொண்டு வந்து கொடுத்துவிடுவார்.
தமிழ் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநில நடிகர்களையும் இப்படியெல்லாம் மயில்சாமி உபசரித்து வந்துள்ளர். இதுபற்றி ஒரு தகவலை பகிர்ந்து இயக்குனர் பி.வாசு ‘கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்தனை வைத்து ‘ஆப்தரக்ஷகா’ எனும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடந்தது. ‘அப்போது திண்டுக்கல் பிரியாணி என பலரும் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அந்த பிரியாணி கிடைக்குமா?’என விஷ்ணுவர்தன் கேட்டார் என்னிடம் கேட்டார்.
நாம் திண்டுக்கல் செல்ல தேவையில்லை. இங்கேயே அது வரும் என அவரிடம் சொன்னேன். எப்படி? என கேட்டார். அதற்கு ஒரு நடிகர் இருக்கிறார் எனக்கூறி மயில்சாமியை அழைத்து எனக்கு திண்டுக்கல் பிரியாணி வேண்டும் என அவரிடம் கேட்டேன். யாரையோ பிடித்து கொஞ்சநேரத்தில் அனுப்பி வைத்துவிட்டார். அந்த பிரியாணி விஷ்ணுவர்தனுக்கு பிடித்து போக அந்த நடிகரிடம் நான் பேச வேண்டும் என்றார். நான் மயில்சாமியை செல்போனியில் அழைத்து ஒரு நடிகர் உன்னிடம் பேச வேண்டும் என சொன்னேன். அவருக்கு விஷ்ணுவர்தன் என தெரியாது.
மயில்சாமியிடம் பேசிய விஷ்ணுவர்தன் தன்னை யார் என சொல்லிவிட்டு ‘ என்னா சாப்பாடு மயில்.. ரொம்ப பிரமாதமாக இருந்தது’ என அவரை பாராட்ட மயில்சாமி மகிழ்ச்சியில் திளைத்து போய்விட்டார்’ என பிவாசு கூறினார்.
இதையும் படிங்க: தேடி வந்த பத்மபூசன்… வேண்டாம் என்று திரும்பிக்கொண்ட எஸ்.ஜானகி…