Connect with us
Mullum Malarum

Cinema News

“ரஜினிக்கு ஒத்த கை”… பிரபல இயக்குனர் யோசித்த வித்தியாசமான கதை… டிவிஸ்ட்டு வைத்த சூப்பர் ஸ்டார்…

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் திரையரங்குகளில் 1000 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது.

Chandramukhi

Chandramukhi

“சந்திரமுகி” திரைப்படத்தை இயக்கியவர் பி.வாசு. “சிவாஜி புரொடக்சன்ஸ்” சார்பாக பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த திரைப்படம் “ஆப்தமித்ரா”. இத்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மணிச்சித்ரதாழு” என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

Apthamithra

Apthamithra

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிரண்டுபோனாராம். அப்போதே இத்திரைப்படத்தை ரீமேக் செய்யவேண்டும் எனவும் அதில் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் முடிவுசெய்தாராம்.

பி.வாசு, அதற்கு முன் ரஜினிகாந்த்தை வைத்து “பணக்காரன்”, “மன்னன்”, “உழைப்பாளி” போன்ற பல வெற்றித்திரைப்படங்களை இயக்கியிருந்தார். ஆதலால் “ஆப்தமித்ரா” திரைப்படத்தை போலவே அதன் தமிழ் ரீமேக்கையும் பி.வாசுவே இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினிகாந்த் நினைத்திருக்கிறார்.

Rajinikanth

Rajinikanth

உடனே சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புக்கொண்டு “உங்கள் நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்கலாம் என நினைக்கிறேன்.பி.வாசு கன்னடத்தில் இயக்கிய ஆப்தமித்ரா திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறேன். பி.வாசுவை தொடர்புகொண்டு அழைத்து வாருங்கள். அவர்தான் இத்திரைப்படத்தையும் இயக்கப்போகிறார்” என கூறியுள்ளார். உடனே சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனத்தார் பி.வாசுவை தொடர்புகொண்டனர்.

“ரஜினிகாந்த் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நீங்கள்தான் அத்திரைப்படத்தை இயக்கப்போகிறீர்கள். நாளை ரஜினியை வந்து சந்தியுங்கள்” என கூறினார்கள். ஆனால் பி.வாசுவிடம் “ஆப்தமித்ரா” குறித்து எந்த தகவலையும் அவர்கள் கூறவில்லை.

இதையும் படிங்க: விஷால் பட நடிகர் வீட்டில் நடந்த பயங்கரம்… மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை..செய்தது யார் தெரியுமா?..

P.Vasu

P.Vasu

ஆதலால் பி.வாசு, ரஜினிக்காகவே ஒரு புதிய கதையை சிந்திக்கத் தொடங்கினாராம். “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் ரஜினி ஒரு கையை இழந்துவிடுவார். அதே போல் ஒற்றை கையுடைய ஒரு ரஜினி கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து ஒரு கதையை யோசித்தாராம்.

அடுத்த நாள் ரஜினியை வந்து சந்தித்தார் பி.வாசு. தான் யோசித்த அந்த ஒற்றை கை ரஜினி கதையை கூற வருவதற்கு முன்பே ரஜினிகாந்த் பி.வாசுவிடம் “ஆப்தமித்ரா பண்ணலாம்” என்றாராம். பி.வாசுவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

Chandramukhi

Chandramukhi

இது எதிர்பாராத ஒன்றாக இருக்கிறதே என நினைத்த பி.வாசு, “ஆப்தமித்ரா” திரைப்படத்தில் இருந்து சில மாற்றங்களை செய்து “சந்திரமுகி” திரைப்படமாக உருவாக்கினார். குறிப்பாக ஆப்தமித்ரா திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரம் கிடையாது. தமிழுக்காக வடிவேலுவுக்கென்று தனி கதாப்பாத்திரம் எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த்தின் கேரியரில் முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்த “சந்திரமுகி” இவ்வாறுதான் உருவாகி இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top