ஹிட் இயக்குனருடன் நடிக்க மறுத்த விஜய்… சிறு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… இதுதான் காரணமா??

by Arun Prasad |   ( Updated:2022-11-09 13:53:00  )
Vijay
X

Vijay

விஜய் தனது சினிமா கேரியரில் விக்ரமன், ரமணா, பேரரசு, தரணி, ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல வெற்றி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் “நடிகன்”, “சின்னத்தம்பி”, “மன்னன்”, “சந்திரமுகி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த பி.வாசு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்ததில்லை.

P. Vasu

P. Vasu

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பி.வாசுவிடமே இது குறித்து கேட்கப்பட்டது. அப்போது விஜய் தன்னை பார்த்து அதிர்ச்சியானது குறித்தும், அதன் பின் விஜய்க்கு தான் கூறிய கதை குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கிய “பணக்காரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டில் நடைபெற்றதாம். அப்போது சிறு வயதே ஆன விஜய், பி.வாசு இயக்கும் முறையை பார்த்து பயந்துவிட்டாராம்.

Vijay

Vijay

அதனை தொடர்ந்து விஜய் பெரிய நடிகரான பின் பி.வாசு, விஜய்யிடம் எப்படியாவது கதை சொல்லவேண்டும் என நினைத்தாராம். எனினும் விஜய்யை நேரில் சந்தித்து கதை சொல்வதற்கு தயக்கமாக இருந்திருக்கிறது. அப்போது அவரது உதவி இயக்குனர் ஒருவர் விஜய்யிடம் தான் சென்று பேசுவதாக கூறியிருக்கிறார்.

அந்த உதவி இயக்குனரிடம் “நீ விஜய்யிடம் பேசும்போது இப்படி போய் கூறு. அதாவது அவர் என்னை பார்த்து பயந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது அவர் வளர்ந்துவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் வளர்ந்துட்டார் என்றால் என்னை அழைக்கச்சொல்” என விஜய்யிடம் கூறுமாறு அவரை அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: “பாட்டு நல்லா இல்ல.. வரியை மாத்து”.. முதல் சந்திப்பிலேயே கடுப்பேத்திய எம்.எஸ்.வி… கண்களாலேயே அனலை கக்கிய கண்ணதாசன்…

P.Vasu

P.Vasu

மேலும் இது குறித்து அப்பேட்டியில் வாசு பேசியபோது “விஜய் வளர்ந்துவிட்டார். எங்கேயோ போய்விட்டார். அவர் வளர்ந்துவிட்ட பின் அவர் ஏன் யோசிக்க வேண்டும்” என கூறியிருந்தார். அதன் பின் விஜய்யை சந்தித்து ஒரு அரசியல் கதையை கூறினாராம் பி.வாசு. ஆனால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அதன் பின் மீண்டும் இன்னொரு கதையை அவருக்காக எழுதினாராம். ஆனால் அதன் பின் விஜய்யிடம் இருந்து அழைப்பு வரவில்லையாம். இது தான் விஜய்யை வைத்து பி.வாசு திரைப்படம் இயக்காததற்கு காரணம் என கூறியுள்ளார்.

Next Story