“எழுதி வச்சிக்கோங்க இவ ஒரு பொம்பள அமிதாப் பச்சன்”… சூப்பர் ஸ்டார் நடிகையை சூப்பர் ஸ்டாரிடமே புகழ்ந்த ஹிட் இயக்குனர்…

Chandramukhi
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. தனது அசரவைக்கும் நடிப்பாலும் சொக்கி இழுக்கும் அழகாலும் பல இளைஞர்களை கைக்குள் போட்டுக்கொண்டவர் இவர்.

Nayanthara
இரண்டாவது படமே ரஜினியுடன்…
நயன்தாரா, கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “மனசநிக்கிரே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்துதான் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தமிழில் இரண்டாவது திரைப்படத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக “சந்திரமுகி” திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து அவரது கேரியர் எங்கோ சென்றது.

Chandramukhi
சந்திரமுகி
ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படம் காலம் போற்றும் மாபெரும் வெற்றியாக திகழ்ந்தது. குறிப்பாக அத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

Chandramukhi
“சந்திரமுகி” திரைப்படம் ஒரு பேய் திரைப்படம் என்று கேள்விப்பட்ட ரசிகர்கள், இது போன்ற படங்கள் எல்லாம் ரஜினிக்கு செட் ஆகுமா என நினைத்தனர். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் “சந்திரமுகி படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் வரவேற்பு பல மடங்கு எகிரும்” என கூறியிருந்தார். அவர் கூறியபடியே நடந்தது. அதாவது “சந்திரமுகி” திரைப்படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து அமோக வரவேற்பு இருந்தது.
சந்திரமுகியாக ஜோதிகா
சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் ஜோதிகா மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக சந்திரமுகியாக மாறிய பின் அவரின் நடிப்பு காண்போரை அசர வைத்தது.

Chandramukhi
நயன்தாரா
நயன்தாரா துர்கா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சொக்க வைக்கும் சிரிப்பழகில் மிகவும் பவ்வியமாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் “சந்திரமுகி” திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பை குறித்து பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவில் பல முறை ரெட் கார்டு வாங்கிய ஒரே வில்லன் நடிகர்… இவருக்கு இப்படியும் ஒரு கதை இருக்கா??

Nayanthara
அதில் “படப்பிடிப்பில் நயன்தாராவை சத்தம் வராமல் மனதில் இருந்து சிரிக்கச் சொன்னேன். சரி என உடனே தலையாட்டினார். ஆக்சன் என்று சொன்னதுமே சத்தமே வராமல் மனதில் இருந்து சிரிப்பதை போல் எக்ஸ்பிரசன் கொடுத்தார். அப்போதே நான் ரஜினியிடம், இந்த பெண் ஒரு பொம்பள அமிதாப் பச்சன், இந்த பெண்ணுக்கு பெரிய எதிர்காலம் உண்டு என பாராட்டினேன்” என கூறியிருந்தார்.
பி.வாசு சொன்னது போல் நயன்தாரா பல விமர்சனங்களையும் அவமானங்களையும் கடந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.