Cinema News
அரைச்ச மாவை எத்தனை தடவைதான் அரைப்பீங்க.!? விக்ரம் என்ன செய்கிறார் தெரியுமா.?!
சியான் விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது. போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
கோப்ரா படத்தின் ஷூட்டிங் அண்மையில் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் ப்ரொடெக்க்ஸன் பணிகள் நடைபெறுகிறது. வரும் மே மாதம் இறுதியில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் கூட்டணி இதுதான்பா.! கமலுக்கு வாழ்த்துக்களா? அனுதாபங்களா?
இந்த படங்களை அடுத்து விக்ரம் தனது 61வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளார். இந்த படத்தில் தங்க சுரங்கம் அதில் உள்ள அரசியல் என கதை நகரும் படி அமைய உள்ளதாம். அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாம்.
இதே தங்க சுரங்க கதைக்களம் தான் கே.ஜி.எப் 1&2. மீண்டும் அதே போல தங்க சுரங்கம் என கூறினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா.? அல்லது ரஞ்சித் தனது பாணியில் இதில் என்ன அரசியல் பேச போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.