Pa.Ranjith: கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? நீயா நானா நிகழ்ச்சியை கடுமையாக சாடிய பா.ரஞ்சித்

by Rohini |   ( Updated:2025-04-15 00:29:07  )
ranjith
X

ranjith

Pa.Ranjith: தமிழ் சினிமாவில் சாதி ரீதியிலான படங்கள் சமீபகாலமாக வரத்தொடங்கி விட்டன. ஆனால் இது சாதி சம்பந்தப்பட்டது இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியினர் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் பட்ட வேதனையை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மாதிரி படங்களை எடுத்து வருகிறோம் என சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் பேசி வருகிறார்கள்.

மாரி செல்வராஜ் கூட ஒரு மேடையில் எங்க வலியை நாங்கள்தான் பேசி ஆகணும். பின்ன யார் பேசுவா? என்று கூறியிருந்தார். பா. ரஞ்சித் படங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் , ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களை சுற்றியே அந்தப் படம் இருக்கும். மெட்ராஸ் படத்தை பார்த்தோம் என்றால் வடசென்னையில் நடக்கும் கதையை மையப்படுத்தி அந்த படம் அமைந்திருக்கும்.

அதிலும் தாழ்த்தப்பட்டவன் பெரிய ஆளாக வரக்கூடாது என சம்பந்தப்பட்டவனை கொன்று விடுவார்கள். இப்படி அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சாதியில் தான் இவருடைய படங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் பா. ரஞ்சித் பேசும் போது நீயா நானா நிகழ்ச்சியை பல வகைகளில் விமர்சித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் ஒருவர் பேசும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசியிருக்கிறார். ஆனால் அதை எடிட் கூட பண்ணாமல் அப்படியே டெலிகாஸ்ட் செய்து விட்டார்களாம்.

இதற்கு எதிராகத்தான் பா. ரஞ்சித் அந்த மேடையில் கடுமையாக பேசியிருக்கிறார். சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் வந்து பேசினார். உண்மையிலேயே உங்களுக்கு குறைந்த பட்ச அக்கறை கூட கிடையாதா? ஒரு சமூகத்தை பற்றி மோசமான உரையாடலை நிகழ்த்துவதற்கு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையை எந்தவொரு எடிட்டும் பண்ணாமல் நீங்கள் ரிலீஸ் செய்கிறீர்கள்.அந்த வார்த்தையை எந்த எடிட்டும் பண்ணாமல் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கிறீர்கள்.

எதுக்கு? ஆறு வருசமா படம் எடுத்துக்கிட்டு இருக்கோமே இதுக்காகத்தான். வேறு எதுக்காகவும் இல்லை. இந்த படம் மட்டும் எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக இவர்கள் எல்லாரும் புரட்சியாளர்களாக மாறி நாங்கள்தான் உங்களை வாழ வைத்தோம். நாங்கள்தான் உங்களுக்கு சோறு கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்று தான் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நீங்கள் இல்லை. நாங்கள் என்று சொல்வதுதான் உங்களுக்கு பிரச்சினை என ஒரு மேடையில் மிக ஆவேசமாக பேசியிருக்கிறார் பா. ரஞ்சித்.

Next Story