Connect with us

உங்களுக்கு மட்டும் தான் லோகேஷ் சினிமா உலகமா? இதோ ரெடியாகிவிட்டது பா.ரஞ்சித் ‘சார்பாட்டா’ உலகம்…

Cinema News

உங்களுக்கு மட்டும் தான் லோகேஷ் சினிமா உலகமா? இதோ ரெடியாகிவிட்டது பா.ரஞ்சித் ‘சார்பாட்டா’ உலகம்…

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியிருந்த கைதி படத்தின் சில காட்சிகளை விக்ரம் படத்தோடு சம்பந்தப்படுத்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

இந்த யுக்தி  தமிழ் சினிமாவுக்கு புதுவிதமான ஐடியா. பலருக்கும் இது பிடித்து போய் இருந்தது. உடனே லோகேஷ் கனகராஜ் சினிமா உலகம் (LCU) என்று அவரைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அவரது அடுத்தடுத்த படங்களும் இதே போல லோகேஷ் கனகராஜ் சினிமா உலகத்தை சுற்றியிருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது வெளியான தகவல் படி, பா.ரஞ்சித்தும் இதே போல் தனது சினிமா உலகத்தை ஆரம்பித்துள்ளார் என கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே ஆர்யாவை ஹீரோவாக வைத்து சார்பட்டா எனும் திரைப்படத்தை எடுத்து முடித்து மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.

இதையும் படியுங்களேன் – பெரிய சமையல்காரியாக ஆக வேண்டும்.. நயன்தாராவின் சூப்பர் ஆசை.. சூரியவம்சம்-2 ரெடி.?!

தற்போது இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு வெப் சீரிஸ் ஆக தயார் செய்ய ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான வேலைகளில் தற்போது இறங்கி உள்ளாராம். ஆனால், இதனை அவர் இயக்குவாரா? வேறு யாரேனும் இயக்குவார்களா என தெரியவில்லை.

அப்படி தயாரானால் அது பா ரஞ்சித்தின் சினிமா உலகம் என்பது போல இருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top