தங்கலான் தங்கம் எடுத்துச்சானு தெரியல! பா.ரஞ்சித் தட்ட தூக்காம இருந்தா சரி

by Rohini |
thangalan
X

thangalan

Thangalan Movie:விக்ரம் நடிப்பில் சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் வித்தியாசமான கெட்டப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட பல போராட்டங்களை கடந்து தங்கலான் திரைப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள் படக்குழு.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தான் தயாரித்திருக்கிறது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விக்ரமுடன் இணைந்து பார்வதி, பசுபதி, மாளவிகா மோகன் என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். கேஜிஎஃப் - ல் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாராகியிருக்கிறது. உண்மையான கேஜிஎஃப் கதையே இதுதான் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..

இந்த நிலையில் தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 24 கோடியை நெருங்கி விட்டதாக பல செய்திகள் வெளியானது. ஆனால் கமர்சியலாக இந்த படம் வெற்றியடைந்ததா என்றால் இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் சில பேர் பேசி வருகிறார்கள். இந்த படத்தின் பெரிய மைனஸ் ஆக கருதப்படுவது வசனங்கள் மக்களுக்கு எளிதில் விளங்கும்படியாக இல்லை என்பதுதான்.

இந்த நிலையில் தங்கலான் படத்தை நீலம் ப்ரொடக்ஷன் ஃபர்ஸ்ட் காபி என்ற வகையில் தான் தயாரித்திருந்ததாம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலாக படத்தின் பட்ஜெட் இன்னும் 19 கோடி அதிகமாக இந்த தொகையை தயாரிப்பாளரிடம் பா ரஞ்சித் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் தர மறுத்து விட்டாராம்.

இதையும் படிங்க: அப்பா இல்லனா என்ன… லோகி ஸ்டைலை கோட்டிலும் பண்ணிடலாம்.. வெங்கட் பிரபு ஸ்கெட்ச்…

அதனால் இந்த படத்தில் பா ரஞ்சித்தை பொருத்தவரைக்கும் கொஞ்சம் நஷ்டம் தான் என கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றது. கமர்சியல் ஹிட் என்றால் ஓரளவு வசூலை அள்ளி இருக்கலாம். ஆனால் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் கொஞ்சம் முன்பின்னாகத்தான் படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story