பா.ரஞ்சித் படம் ஹிந்தி ரீமேக்கிற்கு செல்கிறது..! அதுவும் இந்த மாஸ் ஹிட் ஆன படம்..!!!
2014 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக், கேதரின் தெரசா நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” திரைப்படம் ஹிந்தி சினிமாவில் ரீமேக் செய்யப்பட்ட இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஒரு சுவரை வைத்து அரசியில் பேசி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி வாகை சூடிய பா.ரஞ்சித்தின் “மெட்ராஸ்” திரைப்படத்தை அவ்வளவு எளிதாகத் தமிழ் சினிமா மறக்காது. சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் மற்றும் காட்சிக்கு ஏற்ப இசையும் கூடுதல் பலமாக படத்தின் வெற்றிக்கு அமைந்திருந்தது. தொடர் தோல்விகளுக்குப் பின் நடிகர் கார்த்திக் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். வடசென்னை மீதான பார்வையை உடைக்க பா.ரஞ்சித் எரிந்த முதல் கல் தான் ”மெட்ராஸ்” திரைப்படம்.
அந்த அளவிற்குக் காட்சி அமைப்புகளைக் கொண்டிருந்த இந்த படம் 6 ஆண்டுகளுக்குப் பின்பு தெலுங்கு சினிமாவில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட தயாராக இருக்கிறது. அங்கும் வசூல் வேட்டையை தொடங்க தயார் ஆகி வரும் மெட்ராஸ் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு ஹிந்தி நிறுவனத்திடம் பேசி வருகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
அதேபோல், ஞானவேல் ராஜா தயாரிப்பில், சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான ”டெடி” திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகமால், நேரடியாக ஹாட்ஸ்டாரில் மார்ச் 12 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.