ஜாதியை காரணமாக வைத்து ஒதுக்கப்பட்ட நடிகை...! இந்த மனநிலை உள்ளவரா பா.ரஞ்சித்...?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
வயதானாலும் அந்த இளமை துள்ளும் புத்துணர்ச்சியால் ரசிகர் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். இந்த நிலைமையில் இவரின் காலா படத்தின் ஒரு விமர்சனம் அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்க நாதன் அவர்களால் வெளிப்பட்டது.
அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கன்னட நடிகையும் தமிழில் அதிக படங்களில் நடித்தவருமான நடிகை ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு முன் பிரபல நடிகையான சுகன்யா பெயர் அடிபட்டது. ஆனால் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் சுகன்யாவை புறக்கணித்தார்.
ஏனெனில் சுகன்யா பிராமணர் வகுப்பை சார்ந்தவர் என்பதால் ஜாதியை மனதில் வைத்துக் கொண்டு அவரை ஓரங்கட்டினார் என பயில்வான் ரெங்க நாதன் அவரின் பேட்டியில் தெரிவித்தார்.