Connect with us

Cinema News

கோட் ஷூட் போட்டு ஆண்டவரின் அடுத்த சம்பவம்.! போட்டு வாங்கிய டிடி.! உளறி கொட்டிய பா.ரஞ்சித்.!

உலகாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேற்று வெளியான ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது.

விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற அசுரத்தனமான வில்லன்களிடம் இருந்து உலகநாயகன் கமல்ஹாசன் எப்படி தான் நினைத்ததை சாதித்தார் என்பதை பரபரக்கும் ஆக்சன் மூலம் லோகேஷ் சம்பவம் செய்துள்ளார் என்பதை ட்ரைலர் காட்டிக்கொடுத்துவிட்டது.

 

இதனை அடுத்து, உலகநாயகன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லது இருந்த நேரத்தில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்துகொண்டு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டார்.

இதையும் படியுங்களேன் – சிறப்பான தரமான 2 சம்பவம் தயார்.! அஜித்-61 சும்மா தெறிக்க போகுது.! வெளியான வெறித்தனமான அப்டேட்..,

போதாக்குறைக்கு, தொகுப்பாளினி டிடி வேறு கொளுத்திப்போட ரஞ்சித் உளறிவிட்டாராம். இயக்குனர் பா.ரஞ்சித் , மதுரை பேஸ் படம் கமல் சார் உடன் செய்ய வேண்டும் என கூற, உடனே டிடி, அப்போ வேட்டிய மடிச்சிக்கட்டி ஒரு சம்பவமா என கேட்க, உடனே ரஞ்சித், ஏன் மதுரைனா வேட்டிதானா? கோட் ஷூட் போட்டு படம் பண்ண கூடாதா என பதில் கூற, அரங்கமே அதிரும் வண்ணம் கமல் ரசிகர்கள் கத்தி விட்டனர்.

இதன் மூலம், பா.ரஞ்சித் அடுத்து, கமலை இயக்க 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. அதுவும், மதுரை மையமாக கொண்ட ஒரு படம். அதுவும், பா.ரஞ்சித் இயக்கத்தில் என்பது என ஏகப்பட்ட சர்ப்ரைஸ் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top