பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யா.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?
PaRanjith: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் வில்லன் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அட்டக்கத்தி திரைப்படத்தினை இயக்கி சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.1.75 கோடி பட்ஜெட்டில் வெறும் 50 நாட்களுக்குள் இப்படத்தினை முடித்து இருந்தார். முதல் படமே ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
இதையும் படிங்க:இந்தியாவுல அவன் ஒருத்தன்தான்!.. சூரியை விட்டு விஜய் சேதுபதி பக்கம் போன மிஷ்கின்…
தொடர்ச்சியாக கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் ஹிட் படத்தினை இயக்கினார். இதையடுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கினார். படமும் சுமார் வரவேற்பை தான் பெற்று இருந்தது. தொடர்ச்சியாக ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தினை இயக்கி வெற்றி கண்டார்.
தொடர்ந்து, விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விக்ரமின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுள்ளது. இருந்தும் திரைக்கதை பல இடங்களில் சுமார் வரவேற்பு மட்டுமே பெற்று வருகிறது. இப்படத்தின் வசூலும் சுமார் என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…
இப்படத்தினை முடித்துக்கொண்ட பின்னர் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தினை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சூர்யாவின் ஜெர்மன் படத்தின் வேலைகளும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.