“கிளாமர் நடிகையை கூப்பிட்டு வந்தது தப்பா போச்சே”… திருப்தியே இல்லாமல் புலம்பும் இயக்குனர் பா.ரஞ்சித்…

Thangalaan
தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் பா. ரஞ்சித், தனது தனித்துவமான படைப்பின் மூலம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக உருவானார்.

Pa Ranjith
குறிப்பாக ஒடுக்கப்பட்டோர்களின் கதைகளை மிகவும் துணிச்சலோடு தனது திரைப்படங்களின் மூலம் கூறி வருகிறார் பா.ரஞ்சித். இதனால் ஒரு பக்கம் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக பலர் பேசி வந்தாலும், அவரை எதிர்ப்பவர்களும் பலர் உண்டு. எனினும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக தற்போது வளர்ந்துள்ளார் பா. ரஞ்சித்.
அட்டக்கத்தி தினேஷ் டூ ரஜினி
பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் “அட்டக்கத்தி”. இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற பிறகு கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் பா.ரஞ்சித்தின் கேரியரையே வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. அதே போல் கார்த்தியின் கேரியரிலும் ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது.

Pa Ranjith
“மெட்ராஸ்” திரைப்படத்தின் மாபெறும் வெற்றியை தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படத்திலேயே ரஜினியை வைத்து இயக்கினார். “கபாலி” திரைப்படமும் மாபெறும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் ரஜினியுடன் இணைந்து “காலா” திரைப்படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.
சார்பட்டா பரம்பரை
இத்திரைப்படங்களை தொடர்ந்து ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஆர்யாவின் சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: “இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே”… வருத்தப்பட்ட விஜயகாந்த்… அவல நிலையில் தவித்த அஜித்… என்ன காரணம் தெரியுமா??

Sarpatta Parambarai
இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், முதலில் “சார்பட்டா பரம்பரை” கதையை பா.ரஞ்சித் கார்த்தியிடம்தான் கூறினார். ஆனால் கார்த்தி அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்துதான் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” திரைப்படத்தை இயக்கினார்.
தங்கலான்
இவ்வாறு தமிழின் பல முக்கிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Malavika Mohanan
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால் அதில் மாளவிகா மோகனனின் நடிப்பு பா.ரஞ்சித்திற்கு திருப்தியை அளிக்கவில்லையாம். ஆதலால் மாளவிகா மோகனனை இத்திரைப்படத்தில் இருந்து நீக்கிவிட பா.ரஞ்சித் முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் வெளிவருகின்றன.