Connect with us

நானே பெரிய ப்ராங்க்ஸ்டர்தான் தெரியுமா… அர்ச்சனாவிற்கே அல்வா கொடுத்த முன்னணி இயக்குனர்!

Entertainment News

நானே பெரிய ப்ராங்க்ஸ்டர்தான் தெரியுமா… அர்ச்சனாவிற்கே அல்வா கொடுத்த முன்னணி இயக்குனர்!

டிவி ஆங்கர் அர்ச்சனாவை ஒரு பிராங்ஸ்டராக இயக்குநர் பா.இரஞ்சித் கலாய் கலாய்னு கலாய்ச்சிருக்கார்ங்குறது தெரியுமா உங்களுக்கு… அப்போ என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் முக்கியமானவர் பா.இரஞ்சித். கிரியேட்டர்கள் பலரும் தொடத் தயங்கிய, பேசத் தயங்கிய விஷயங்களை வெளிப்படையாக வெள்ளித்திரையில் பேசியவர். சாதிய அடுக்கு படிநிலைகளைத் தனது படங்கள் மூலம் பேசி, அதைப்பற்றி பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்திய பா.இரஞ்சித், ஆரம்பகாலங்களில் இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் என்பது நாமெல்லாம் அறிந்ததே… அப்போது, பயங்கர ஆக்டிவாக இருப்பாராம் பா.இரஞ்சித். அப்படியான காலகட்டத்தில் இளமை புதுமை போன்ற ஷோக்கள் மூலம் பிரபலமாக இருந்த ஆங்கர் அர்ச்சனாவை இவர் பிராங்க் பண்ணிய சம்பவம் ஒண்ணும் நடந்திருக்கு…

அர்ச்சனாவின் தோழி ஒருவரின் மூலம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சிங்கப்பூர் சேனல் ஒன்றுக்காக ஹல்வா படக்குழு இதை ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு, இப்படியான பிராங்க் ஐடியாவைச் சொன்னபோது, நான் பண்றேன்னு பா.இரஞ்சித் முன்வந்திருக்கிறார். அந்த சம்பவத்தில் என்ன நடந்துச்சுன்னா… ஹோட்டல் ஒன்றில் தனது தோழியுடன் அமர்ந்திருந்த அர்ச்சனாவிடம், தன்னை இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பா.இரஞ்சித் அறிமுகப்படுத்திக் கொள்வார்.

இதையும் படிங்க: VJவிலிருந்து RJவாக மாறிய அர்ச்சனா… என்ன கொடுமை சரவணா இது?

பின்னர், உங்களுக்கு ஒரு ரோல் இருக்கு என வித்தியாசமான கதை ஒன்றையும் அவரிடம் சொல்லத் தொடங்குவார். அதைக்கேட்ட அர்ச்சனா, என்ன இப்படி ஒரு கதையா என்கிற ரீதியில் அவரைத் தவிர்க்கத் தொடங்குவார். ஆனால், விக்ரமாதித்தயன் வேதாளம் கணக்காகத் தொடர்ந்து பேசும் பா.இரஞ்சித், `படத்துல நடிக்கணும்னா உங்களுக்கு எவ்வளவு வேணும்… நூறு ரூபாய் போதுமா.. தினசரி நூறு ரூபாய்ங்குற பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்தா கரெக்டா நடிச்சுக் கொடுப்பீங்களானு கேப்பார். இதைக்கேட்ட அர்ச்சனா, என்ன சொல்றீங்க… நீங்க சொல்ற தொகை பஸ்ஸுக்கான காசா… லோ பட்ஜெட் படமானு ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவார்.

ஆனால், பிராங்க் பண்ணும் பா.இரஞ்சித், யாரு சொன்னா உங்களுக்கு… உங்ககிட்ட சொன்ன இந்த சீனுக்கு மட்டுமே இரண்டு கோடி ரூபாய் வரைக்கும் பட்ஜெட் போட்டிருக்கோம். உங்ககிட்ட நான் கேட்டது ஹீரோயின் ரோலுக்கு இல்லீங்க… ஜூனியர் ஆர்டிஸ்ட் ரோலுக்குனு கலாய்ச்சு விடுவார். ஒரு கட்டத்துல அந்த ஷோவோட புரடியூஸர் பிரேமுக்குள் வந்து இது வெறும் பிராங்க்தான்னு சொல்லு அர்ச்சனாவுக்கு அல்வா கொடுப்பார். அதன்பிறகு வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, சிரித்துக் கொண்டே பா.இரஞ்சித்தின் முதுகில் செல்லமாகத் தட்டுவார். இந்த வீடியோ பயங்கர வைரல்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top