Connect with us

Cinema News

ஆமா நான் ரவுடிதான்!.. திமுகவை டைரக்டாக மோதிய பா. ரஞ்சித்!.. விஜய் அண்ணாவுக்கு இன்னொரு போட்டியா?..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூரில் அவரது வீட்டருகே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது கொலை தொடர்பாக கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் இருந்து அதிக பாதிப்பை சந்தித்த இயக்குனர் பா. ரஞ்சித் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பா. ரஞ்சித்துக்கு எதிரான கருத்தை தெரிவிக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் பேசிய நிலையில், தற்போது அதற்கும் பா. ரஞ்சித் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:எங்க அப்பா ஒரு மாதிரியான ஆளுங்க… Round table-அ தான் இருப்பாரு… ராதாரவி சொன்ன சுவாரஸ்யம்…

திமுகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் பாஜகவின் பி டீம் என்றும் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என்றும் திமுக ஐடி விங் தொடர்ந்து பட்டம் கட்டி வருவதற்கு என்ன காரணம் என்றும் எதிர்த்து பேசினால், ரவுடின்னு சொல்வீங்களா? அப்போ நானும் ரவுடி தான் என பா. ரஞ்சித் நேரடியாகவே திமுகவை எதிர்த்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு முன்பாக பா. ரஞ்சித் அரசியல் தலைவராக மாறிவிடுவார் போல தெரிகிறது என பல மீம்கள் பறந்து வருகின்றன.

இதையும் படிங்க: விவேக் மாதிரி டூப் போட்ட நடிகர் ஷங்கரிடம் எழுப்பிய கேள்வி… பதிலைக் கேட்டதும் பொட்டிப் பாம்பாயிட்டாரே..!

திமுகவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன், இனிமேல் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டேன் என்றும் பா. ரஞ்சித் தொடர்ந்து பேசி வரக் காரணமே ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலை என்கிற சந்தேகத்தால் தான் எனக் கூறுகின்றனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ரிலீஸுக்கு சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் மூலம் உருவான ஆழமான நட்பு! ‘அந்தகன்’ படத்திற்காக விஜய் செய்யப் போகும் காரியம்

google news
Continue Reading

More in Cinema News

To Top