More
Categories: Cinema News latest news

அந்த க்ரூப் எடுக்கிறதெல்லாம் படமே இல்லை!.. நாங்க எடுக்கிற படங்கள் தான் மாஸ்.. பா. ரஞ்சித் பேச்சு!..

பா. ரஞ்சித் வகையறா படங்கள் தான் தலீத்திய சினிமா என்கிற நிலைமைக்கு தமிழ் சினிமாவில் ஒரு க்ரூப் இயக்குனர்கள் படங்களை இயக்கி வருகின்றனர். மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், விஜயகுமார் என வரிசையாக பல இயக்குநர்கள் அது போன்ற படங்களை எடுத்து வருகின்றனர்.

ஆனால், அந்த படங்கள் எல்லாம் கிராஃப்ட் சிறப்பாக உள்ளது. திறமையான இயக்குநர்கள் அந்த படங்களை இயக்கி ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்க வைக்கின்றனர் என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இரத்தம் பீறிட்டு வருது! அஜித் முடியவே முடியாதுனுட்டாரு.. பெப்சி விஜயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

ஆனால், நம்மை திட்டி படம் எடுக்கும் க்ரூப் இருக்கே அந்த க்ரூப் எடுக்கும் படங்கள் எல்லாம் குப்பை படங்கள் என்றே பா. ரஞ்சித் ஒரே போடாக போட்டுள்ளார். மோகன். ஜி இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் மற்றும் சமீபத்தில் ஆர்.கே. சுரேஷ் நடித்து வெளியான காடுவெட்டி உள்ளிட்ட படங்களைத் தான் பா. ரஞ்சித் நேரடியாக அட்டாக் செய்வதாக விவாதங்கள் வெடித்துள்ளன.

காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் எல்லாம் மத பிரிவினை தூண்டும் படங்கள் என சொல்லப்படுகின்றன. ஆனால், அந்த படங்களின் கிராஃப்ட் வொர்க் சிறப்பாக இருந்ததால் தான் அந்த படங்களுக்கு பெரிய சப்போர்ட் கிடைக்கிறது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் படம் ஓவரா!.. அடுத்த படத்தில் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன்!.. இயக்குநர் யாரு தெரியுமா?..

பா. ரஞ்சித் சொல்வது போல அவர்களை எதிர்க்கும் படங்கள் கிராஃப்ட் சரியாக அமைந்து விட்டால் அதெல்லாம் நல்ல படமாக மாறி விடுமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

அந்த கூட்டத்திலேயே தலீத் படங்கள் என தனிமைப்படுத்துவதை விட மெயின் ஸ்ட்ரீம் படங்களாக மக்களுடன் மக்களாக வேற்றுமையின்றி கலப்பதுதானே அம்பேத்கரின் கொள்கையாக இருந்தது எனக் கேட்க, தனித்து தெரிய வேண்டும் இதையெல்லாம் நார்மலைஸ் செய்தால் நமக்குத்தான் பிரச்சனை என்பது போல பேசியுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts