விக்ரம், கமல் வரிசையில் ’வேட்டுவம்’ படத்தில் நடிக்கப் போகும் நடிகர்...? போஸ்டரை வெளியிட்டு திகிலூட்டிய ரஞ்சித்...!
பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் இந்தியாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முக்கியமாக நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான், தமன்னா, பூஜா ஹெக்டே, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் , இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது தயாரிப்பில் உருவாகும் ‘ வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்படவிழாவில் வெளியிட்டார். அதில் ஒரு வேட்டைப்புலியின் ஓவியத்தை ஃபர்ஸ்ட் லுக்குக்காக வைத்திருந்தார். இதைப் பார்த்த நம்ம வட்டாரங்கள் ஒருவேளை நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தின் போஸ்டராக இருக்குமோ என்று யூகித்து வந்தனர். அப்படி இல்லையென்றால் கமலுடன் சேர்ந்து படம் பண்ணப் போகிறாரே அந்த படத்தின் போஸ்டரா இருக்குமோ என்று புலம்பி வந்தனர்.
இதை பற்றி விசாரித்ததில் இரண்டு பேரின் படமும் இல்லையாம். ஏற்கெனவே விக்ரம், கமல் வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் நமக்கு தெரிந்ததே. அதற்கு இடைப்பட்ட காலங்களில் அவர் சொந்த தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இந்த படத்தை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க பாலிவுட்டை சேர்ந்த பல தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து வேட்டுவம் படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.
விக்ரமிற்காக ஸ்கிர்ப்ட் தயாரித்து கொண்டு இருக்கிறாராம். அது முடிந்ததும் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது சொந்த தயாரிப்பிலயே வரிசையாக நிறைய படங்கள் வெளியாகாமல் கைவசம் வைத்துள்ளதாக தகவல் பரவுகிறது.